கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக கடற்றொழில் மீன்பிடி குறைவடைந்துள்ளது!

செவ்வாய் டிசம்பர் 03, 2019

அம்பாறை மாவட்டதில் அண்மைக்காலமாக கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக கடற்றொழில் மீன்பிடி குறைவடைந்துள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந் நிலையில் கரையோரப் பிரதேசங்களில் கடலரிப்பு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரிய நீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையிலான பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடலில் ஏற்பட்டுள்ள நீரோட்டத்தின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக வலைகள் வேறு திசைக்கு இழுத்து செல்லப்படுவதாகவும், தோணிகளை கரையயேற்றுவதற்கு சிரமப்படுவதாகவும் மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.

மீன்பிடியை நம்பி வாழ்வை நடத்திவரும் மீனவர்கள் மீன்பிடி குறைந்துள்ள காரணத்தால் மூலதனத்தை செலவுசெய்து கடலுக்குச் சென்று வெறுங்கையோடு வீடு செல்ல நேரிடுகின்றது எனத் தெரிவித்துள்ளனர்.