கடலில் மிதந்து வந்த பொதிகள்..!

சனி பெப்ரவரி 15, 2020

திருகோணமலை கடற்பரப்புக்கு 180 கடல் மைல் தொலைவில் கடலில் மிதந்துக் கொண்டிருந்த ஐஸ் வகை போதை பொருள் அடங்கிய மூன்று பொதிகளை மீனவர்கள் கண்டெடுத்துள்ளனர்.

தங்கல்ல குடாவெல்ல மீன்பிடி துறை முகத்திற்கு வருகை தந்த படகில் இருந்த மீனவர்களே இந்த போதை பொருள் பொதிகளை கண்டெடுத்துள்ளனர்.

பின்னர் அந்த பொதிகளை மீனவர்கள் கடற்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட பொதிகளில் ஐஸ் வகை போதை பொருள் என சந்தேகிக்கப்படும் 3 கிலோ 172 கிராம் அடங்கிய போதை பொருள் இருந்தமை உறுதிச்செய்யப்பட்டுள்ளது.

தங்கல்ல காவல் துறையினர்  இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.