கடலில் நீராட சென்ற இளைஞன் நீரில் மூழ்கி மாயம்!

ஞாயிறு ஏப்ரல் 14, 2019

கொச்சிக்கடை, போருதொட்ட பகுதியில் கடலில் குளிக்க சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி காணமல் போயுள்ளார். 

மூவருடன் கடலில் குளிப்பதற்கு சென்ற குறித்த இளைஞன் ஒருவனே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கொழும்பு, மாளிகாவத்த பகுதியை சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளான். 

கர்வல் துறை  மற்றும் கடற்படையினர் ஒன்றிணைந்து குறித்த இளைஞனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.