கடல்களில் நீர் வற்றி விட்டால் பூமி எப்படி இருக்கும்?

சனி டிசம்பர் 14, 2019

2008-ல் நாஸா விஞ்ஞானிகள் வெளியிட்ட வீடியோ ஒன்றினை தற்போது உயர் தொழில்நுட்பத்துடன் ஹை ரிசல்யூஷனில் மறு உருவாக்கம் செய்துள்ளனர். அதில் கடல்கள் வற்றி விட்டால் பூமி எப்படியிருக்கும் என்ற ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் ஓ டோனகு என்ற ஜப்பானிய விஞ்ஞானி இந்த அனிமேஷன் படத்தை ஹை ரிசல்யூஷன் முறையில் தயாரித்துள்ளார்.

புவிவெப்படைதல் நடவடிக்கைகளினால் உலகின்பெரும் பனிப்பிரதேசங்களில் பனி உருகி கடல் நீர் மட்டம் அதிகரித்து 2100-ம் ஆண்டு வாக்கில் மும்பை உட்பட உலகின் கடற்கரை நகரங்கள் அழியும் ஆபத்து இருப்பதாக சூழலிய விஞ்ஞானிகள் எச்சரித்துள்ள நிலையில் கடல்களில் நீர் வற்றினால் பூமி எப்படியிருக்கும் என்ற விபரீத யோசனை இந்த ஜப்பான் விஞ்ஞானி ஓ டோனகுவுக்குத் தோன்றியுள்ளது ஆச்சரியமே.

மேலும் உலகின் 70% பகுதி கடல்களால் சூழப்பட்டுள்ளது. ஆழிசூழ் உலகு என்று தமிழில் ஒரு நாவலே வந்துள்ளது. இந்நிலையில் கடல் இல்லாமல் போனால் என்ற கற்பனை ஒரு விபரீதக் கற்பனையே.

உலகில் உள்ள உணவுப்பொருட்கள் முற்றிலும் அழிந்தாலும் கடல் மட்டுமே அத்தனை மக்கள் தொகைக்கும் உணவளிக்கக் கூடியது என்று ஆய்வுகள் தெரிவிக்கும் நிலையில் கடல்களில் நீர் வற்றினால் என்ற சப்லைம் கற்பனை அவருக்கு ஏற்பட்டுள்ளது அவரது அறிவியல் மூளையைக் காட்டுகிறது.

ஆனால் இவ்வளவு பெரிய கற்பனையை பிரதிநிதித்துவம் செய்ய முடிவதுதான் அதை விட பெரிய ஆச்சரியம். அதற்கு இந்தக் காலக்கட்டத்து அனிமேஷன் உத்திகள் உதவுகிறது.

முதலில் 10 மீட்டருக்கு கீழே செல்லும் கடலின் நீர்மட்டம் அடுத்த சில நொடிகளில் 130 மீட்டர், 200 மீட்டர் என வேகம் கொள்கிறது. இறுதியில் 5000 மீட்டருக்கும் அப்பால் கடல் நீர் வற்றிப்போவதால் ஏற்படும் விளைவுகள் இந்தப் படத்தில் காட்டப்படுகின்றன. இறுதியாக தண்ணீர் முழுமையாக நீர் வற்றிப்போவதால் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்காவில் பாலைவனம் நிலப்பரப்பு அதிகமாவதைக் காட்டியுள்ளது.

கடலின் மையப்பகுதியே 6,500 அடி ஆழத்துக்குப் பிறகுதான் தோன்றுகிறது. 19,685 அடியில் கடலின் அனைத்து தண்ணீரும் இல்லாமல் போய்விடுகிறது. இத்தகைய அனிமேஷனை மறு உருவாக்கம் செய்துள்ளார் ஓ’டோனகு.