கடலூரில் மீண்டும் கனமழை, கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

ஞாயிறு நவம்பர் 22, 2015

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலூரில் கடந்த நவம்பர் 9 ஆம் தேதியிலிருந்து பெய்த  கனமழையால் கடலூர் மாவட்டமே வெள்ளக்காடாக மாறியது. தமிழகத்தில் கடும் மழையாலும் வெள்ளத்தாலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் மீண்டும் கடலூரில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு மீண்டும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

நாகை மாவட்டமும் வெள்ள பாதிப்பால் தத்தளிக்கிறது.

வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி  நாளை(நவம்பர் 23) கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.