கடந்த 600 நாட்களாக சீனாவை விட்டு வெளியே செல்லாத ஜி ஜின்பிங்

செவ்வாய் செப்டம்பர் 14, 2021

 சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கடந்த 600 நாட்களாக சீனாவைவிட்டு வேறு நாடுகளிற்கு செல்லவில்லை என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளதுடன் இது மேற்குலகுடான உறவுகளை மேலும் பாதிக்கும் என அவர்கள் கருதுவதாக புளும்பேர்க் தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை சீன ஜனாதிபதி பிரிக்ஸ் தலைவர்கள் மெய்நிகர் சந்திப்பில் கலந்துகொண்டார்.

இந்த சந்திப்புடன் அவர் இந்த வருடம் பல வீடியோ சந்திப்புகளில் கலந்துகொண்டுள்ளார்.

ரஸ்ய ஜனாதிபதி ஜேர்மன் சான்சிலர் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் உட்பட சுமார் 60 உலக தலைவர்களை இந்த வருடம் தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ள சீனா ஜனாதிபதி அமெரிக்க ஜனாதிபதியுடன் கடந்த வெள்ளிக்கிமை தொலைபேசி மூலம் உரையாடினார்.

கொரோனா வைரசினை முற்றாக ஒழிப்பதற்கான ஒரு முயற்சியின் விளைவாக உள்நாட்டிலேயே தங்கியிருப்பதற்கான சீன ஜனாதிபதியின் விருப்பத்தினால் இராஜதந்திர விளைவுகள் ஏற்பட ஆரம்பிக்கலாம் என்ற கவலைகள் அதிகரிக்கின்றன, குறிப்பாக ரோமில் ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ள ஜி20 மாநாட்டையும் அதன் பின்னர் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாட்டை அவர் தவிர்ப்பது குறித்த கவலைகள் உருவாகியுள்ளன, என புளும்பேர்க் குறிப்பிட்டுள்ளது.

ஹொங்கொங் முதல் கொவிட் 19 வரையிலான விவகாரங்களினால் மேற்குலகிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

வெளிநாடுகளிற்கு செல்வதற்கு சீன ஜனாதிபதி தயங்குவது மேற்குலக நாடுகளுடன் உறவை மேம்படுத்துவதற்கான தடையாக அமையலாம்,.நாடுகள் மத்தியிலான பதட்டத்தை குறைப்பதற்கு உதவுகின்ற நேரடி சந்திப்புகளிற்கான வாய்ப்பை இது குறைப்பதே அதற்கு காரணம்.

ரோம் மாநாட்டில் கலந்துகொள்வது குறித்து ஜி இன்னமும் உறுதிப்படுத்தவில்லை என அரசாங்க அதிகாரி ஒருவரும் சிரேஸ்ட ஐரோப்பிய இராஜதந்திரியும் தெரிவித்தனர் என புளும்பேர்க் குறி;ப்பிட்டுள்ளது.

கொவிட் விதிமுறைகள் காரணமாகவே ஜனாதிபதி இந்த மாநாடுகளில் கலந்துகொள்சவதை தவிர்க்கின்றார் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஜி ஜின்பிங் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளமாட்டார் என வெளியாகும் தகவல்கள் குறித்து கவலை வெளியிட்டுள்ள அதிகாரிகள் இது குறித்து உச்சிமாநாட்டிற்கு பாதிப்பினை ஏற்படுத்தலாம் என குறிப்பிட்ள்ளனர்.

2020 ஜனவரி 18 ம் திகதி இறுதியாக சீன ஜனாதிபதி மியன்மாரி;ற்டகு சென்றிருந்தார் அதன் பின்னர் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கா வுகான் முடக்கப்பட்டது.

நோய் தொற்று ஆபத்தினை கருத்தில்கொள்ளும்போது உயர்மட்ட பயணங்கள் அவசியமற்றவை என ஆய்வாளர் ஒருவர் புளும்பேர்க்கிற்கு தெரிவித்தார்.