கடற்கரை பகுதிகளை சுத்தம் செய்யும் நிகழ்வு!!

செவ்வாய் செப்டம்பர் 22, 2020

சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகாரசபை அனுசரணையுடன்  கடற்கரை பகுதிகளை சுத்தம் செய்யும் நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) கிளிநொச்சி பூநகரியில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பூநகரி பிரதேச செயலாளர் எஸ் கிருஸ்ணேந்திரன்,  பூநகரி பிரதேச செயலகம், பிரதேச சபை, கடற்றொழிலார் சமாசம் சிறீலங்கா இராணுவம் மற்றும் கடற்படை ஆகியோருடன் பிரதேச மக்கள் இணைந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வு சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் அனுசரணையுடன் பூநகரி பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 8 மணியளவில் கௌதாரிமுனை கடற்கரையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.