கடற்கரும்புலி லெப்.கேணல் நளாயினி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!

சனி செப்டம்பர் 19, 2020

தமிழ்த் தேசிய இனத்தினது அரசியல் சுபீட்சத்திர்க்கான , ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் வரலாறு என்பது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வரலாறுதான். இந்தப் புதிய சரித்திரத்தின் கதாநாயகனாய் முன்னின்று,தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்,விடுதலைப் போராட்டத்தை நெறிப்படுத்தி நகர்த்திச் செல்கின்றார்.

தமிழீழ தனியரசை நோக்கிய இந்த நெடுவழிப்பதையில்,பெரிய பெரிய கனவுகளோடு அவர் பிரசவித்த குழந்தைகளில் ஒன்றுதான் விடுதலைப்புலிகளின் கடற்புலிகள்.

விடுதலைப் போராட்டம் முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற பிரதான பரிமாணங்களில் ஒன்றான கடற்புலிகள் அமைப்பானது , எங்கள் சரித்திர ஏட்டில் பொன் எழுத்துக்களால் பொறித்து வைக்கப்படவேண்டிய ஒரு அத்தியாயமாக ஆகிவிட்டது.வரலாற்றுத் தொடரோட்டத்தில் , யுத்தம் ஊடறுத்துச் செல்லும் இன்றைய நாட்களைக் குறிக்கும் ஒரு காலத்தின் பதிவாகவும் , கடற்புலிகள் மகிமையை பெற்றுவிட்டனர். சிறீலங்காவுக்கு எதிரான இரண்டாவது யுத்தத்தினூடு முன்னேறிச் சென்ற எங்கள் சுதந்திரப் போராட்டத்தை வளர்ட்சியின் இன்னொரு கட்டப் பரிமாணத்திற்கு உந்தித் தள்ளியவர்கள் கடற்புலிகள் என்றால் , அது மிகையானதல்ல.

புரட்சியை அடிபணியச் செய்தல் , அல்லது அழித்து ஒழித்து விடுதல் எனும் மூலோபாயத்ததுடன் தமிழீழத்தின் தொண்டைக்குழியை நெரிபதைப் பிரதான தந்திரோபாயமாகக் கொண்டு ஆகக் கடைசி வழியெனக் கருதி எதிரி வரைந்த போர்முறைத் திட்டமொன்றையும் எங்களது கடல் வேங்கைகள் தான் முறியடித்தனர்.

பொருத்தமானதாகவும் , மிகச் சரியாகவும் கணிக்கப்பட்ட ஒரு காலகட்டத்தில் , கடற்புலிகள் அமைப்புக்குப் புத்துயிர்ப்புக் கொடுத்து யுத்த அரங்கில் மேடை ஏற்றியதன் மூலம் யாழ்ப்பாண முற்றுகையை உடைத்தேறிந்ததுடன் , வரலாற்றில் சிறப்பான இந்தப் பாத்திரத்தை வகிக்கும் சர்ந்தப்பத்தையும் அவர்களுக்கு வழங்கிய பெருமை தேசியத்தலைவர் அவர்களையே சாரும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னைய தமிழர்களின் சரித்திரத்தில் , சோழப் பேரரசன் ராஜராஜனின் கடற்படை அந்த மன்னனுக்கு வெற்றிகளைப் பெற்றுக் குவித்துத் தந்து வரலாற்றைப் படைத்தது.

இன்று …..

தமிழினம் மீளவும் எழுட்சிகொண்டுள்ள சரித்திரத் திருப்பவேலையில் , தமிழினப் பெருந்தலைவர் பிரபாகரனின் கடற்படை மீண்டுமோர் வரலாற்றைப் படைத்து முத்திரை பதித்து வருகின்றது. இக்காலத்தில் படைக்கப்படுகின்ற இந்தப் புதிய சரித்திரத்தில் முன்னைய எக்காலத்திலுமே இல்லாததாக ஒரு வரலாற்று அபூர்வம் பிறப்பெடுத்துள்ளது. அதுதான் கடற்புலிகளின் பெண்கள் படையணியாகும்.

கடலோடிப்போன ஆண் உறவுகளைத் தேடி கரைகளில் கண்ணீர் வடித்து நின்ற எங்கள் பெண்டிரை கடலேறிச் சென்று களமாட வைத்துப் புதியதோர் காவியம் படிக்கச் செய்தார் எங்கள் தேசியத்தலைவர். ஆரம்பத்தில் சிலர் நம்பிக்கையீனப்பட்டார்கள். கடலும் பெண்களுக்கு சரிப்பட்டுவராத சமாச்சாரம் என்றார்கள். கடல்சார் நடவடிக்கைகளிலும் , கடற்சண்டைகளிலும் மகளிரை ஈடுபடுத்துவது சாத்தியமில்லாத சங்கதி என்று கருத்துச் சொன்னார்கள்.

தேசியத்தலைவர் மட்டும் தளராதிருந்தார்.

அவரது சிந்தனையோட்டத்தில் முளைவிட்ட செயற் திட்டங்களையெல்லாம் விடுதலைப்புலிகள் இயக்கம் வீரசாதனைகளாகப் படைத்த பழைய வரலாறுகளின் போது , வெளி ஆட்களுக்கு அவையெல்லாம் நம்புவதர்கரிய ஆச்சரியங்களாய்த் திகழ்ந்தன.

அவற்றைப் போன்றதொன்று தான் கடற்புலிகளின் மகளிர் படையணியுமாகும்.

தேசியத்தலைவரது ஆழ்மனக் குகைக்குள்ளிருந்து உதயசூரியனாகப் பிரகாசித்த எண்ணக் கருவைச் செயற்பாட்டுச் சாத்தியமாக்கி தளபதி சூசையின் தோளுக்குத் தோல் தந்து நின்று பாடுபட்டு மகளிர் கடலைணியை வானுயரக் கட்டியெழுப்பிய அதன் முதற் சிறப்புத் தளபதி தான் லெப் கேணல் நளாயினி.

மகளிர் படையணியிலிருந்து கடற்புலிகளுக்கென வழங்கப்பட்ட 30 பேர் கொண்ட முதற் குழுவில் அவளோடு அங்கம் வகித்து , கடற்புலிகள் பெண்கள் படையணியின் மூலவேர்களுள் ஒன்றாக இயங்கி , அதனைத் திடகாத்திரத்தோடு வளர்த்தெடுக்க உரம் சேர்த்த இன்னொருத்திதான் மேஜர் மங்கை.

இந்துமாசமுத்திரத்தின் அலை மலைகளைத் தாவிக் கடந்து , தமிழீழப் பெண்ணினம் சாதனை படைக்கவென அல்லும் பகலும் அயராது உழைத்த அந்த மேனிகள் , இப்போது ஓய்ந்து விட்டன.

புதிய வரலாற்றின் அத்தியாயங்களாக….. புதிய வழித்தடத்தின் சுவடுகளாக….. புதிய மாற்றமொன்றின் திறவுகோல்களாக அவர்கள் கடற்தாயோடு கலந்துவிட்டார்கள்.

விண்மீன்களை வைத்துத் திசையறியச் சொன்னதிலிருந்து, கடலோடிச்சென்று களமாடக்கற்றது வரை,ஒன்றாகச் சோறு குழைத்து ஊட்டி வளர்த்தெடுத்து எம்மை ஆளாக்கிவிட்ட அந்த ஆசான்கள் ஆருயிர் நண்பிகள் அன்புக்கினிய எங்கள் தளபதிகள் இனி வரமாட்டார்கள்.

ஓயாது மூசிவந்து கரைகளில் மோதி அறையும் அலைகளைப்போல அவர்களது சுவடுகளில் ஆயிரமாயிரமாய் நாங்கள் தொடர்ந்து அணிவகுப்போம்.

கடற்புலிகளுக்கு வரும்போதே கரும்புலிகளாக வந்தவர்கள் அவர்கள்…… வந்ததன் பின்பு கரும்புலிக் காவியத்தைக் கடலிலேதான் படைக்கவேண்டும் என்பது ஒரு ஆக்ரோசமான வேட்கையாக அவர்களை ஆட்கொண்டது.

எதிரியை எதிர்கொண்ட ஒவ்வொரு கடற்சண்டைக் களத்திலும் மட்டுமல்ல,”சாகரவர்த்தனா”வைச் சாகடித்தும் அவர்கள் அதனைத்தான் சாதித்துப் போனார்கள்.

‘ஒப்பரேசன் தவளை‘க்குப் படையெடுக்கும் வேளையில் பாமா சொல்லிவிட்டுப் போனவைகள் நளாயினியின் ஆழ்மனக் குகையில் பசுமையாய்த் தேங்கிக் கிடந்தன.

தரைச் சண்டைகளில் நாங்கள் திறமையாகச் செயற்ப்படவேண்டும் தான் , ஆனால் நாங்கள் கடற்சண்டைக்குரியவர்கள். நாங்கள் கடலிலே சாதிப்பது மட்டுமல்ல கடலிலேதான் சாகவும் வேண்டும். ‘ யாழ்தேவியில் சுகன்யாவை இழந்தது எனக்குள் துரதிஸ்டம்.எனவே நீங்கள் திறமையாகச் சண்டையிட்டு கவனமாகத் திரும்பி வாருங்கள்..

காவலரண் தொகுதி ஒன்றைத் தாக்கும் அணிக்குப் பொறுப்பாகச் சென்று வெடிபட்டு மருத்துவமனைக் கட்டிலில் சுயநினைவற்றுக் கிடந்தது ” பாமா….. பாமா….” என்று நளாயினி கத்திக்கொண்டேயிருக்க பாமா எங்களைவிட்டும் அவளைவிட்டும் எட்டாததூரத்திர்க்குப் போய்விட்டாள்.

காங்கேசன்துறையில் கண்காணிப்பு நிர்வாகக் கப்பலைத் தகர்க்க கடற்கரும்புலிகள் புறப்பட்டுப் போனபோது தானும் போக முடியவில்லையே என்ற ஆதங்கம்”நளாயினிக்கு”

தன்னுடைய பிள்ளைகளுக்கு முன்பு தான் கரும்புலியாகப் போகவேண்டும் என்ற மன உணர்வோடு இருந்தவள்தானே அவள்.

திரும்பிவந்த தாக்குதல் அணிக்குள் அங்கையர்கண்ணி இல்லாததைக் காணநேர்கையில் அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

நளாயினி உண்மையிலேயே வித்தியாசமானவள்தான்.

சிந்திப்ப்பில் செயற்ப்பாட்டில் சுறுசுறுப்பில் நினைத்ததைச் செய்து முடிக்கும் உழைப்பில் அவள் எங்களைவிட மேலோங்கித்தான் நின்றாள்.

ஒரு மிதிவண்டிதானும் இல்லாமலிருந்த ஆரம்ப நாட்களில்,மங்கையும் அவளும் ஒழுங்க்கைக்கு ஒழுங்கை நடையாய் நடந்தார்கள்.

வீதிவீதியாகத் திரிந்து,வீடுவீடாகக் கருத்துச் சொல்லி,புதிது புதிதாகப் பிள்ளைகளைச் சேர்த்து,கடற்புலிகள் மகளிர் அணியை உறுதியான ஒரு அத்திவாரத்தின் மீது அவர்கள் கட்டியெழுப்பினார்கள்.

பெரிய பெரிய கனவுகளெல்லாம் அவர்களது நெஞ்சுக் கூட்டுக்குள் புதைந்து கிடந்தன.

ஆண்போராளிகள் துணையின்றி கடலில் நாங்கள் தனித்து சண்டை பிடிக்கவேன்டும்.

தங்களது கனவுகளையெல்லாம் நனவாக்க அவர்கள் பட்டபாடு கொஞ்ச் நஞ்சமல்ல.

நளாயினிக்கும்–மங்கைக்கும் உள்ளே ஒரு வேட்கை குடிகொண்டிருந்த்தை ஆரம்பத்திலிருந்தே நாங்கள் கண்டோம்.

ஆண் போராளிகளுக்கு நிகராக அல்ல.அவர்களைவிட மிகையாக நாங்கள் செய்து காட்டவேன்றும்,அவர்கள் சாதிப்பதைவிட அதிகமாக நாம் சாதிக்க வேண்டும்.

இந்த வைராக்கியம் தான் அவர்களுக்குள் இருந்து அவர்களை இயக்கியது. எங்களையும் இயக்குவித்தது.

தமது சொல்லாலும்–செயலாலும் எப்போதும் எங்களுக்கு உருதியூட்டிக்கொண்டு
இருந்தார்கள்.

அலை குமுறும்,ஆர்பரித்தெழும் , கடற்கரைகளில் மூசி அடிக்கும்.  பெரிய கடலா இருந்த கடலைப்பார்த்து அச்சப்பட்டு நின்றோம் நாங்கள்.

ஒவ்வொருத்தராய்க் கடலில் இறங்கி மெல்ல மெல்லத் தவழவிட்டு , காலடித்து கையடித்து முக்குளித்து நிமிர்ந்த எங்களை திரும்பவும் தவழவிட்டு மீன்களுக்கு இணையான நீச்சல்க்காரர்களாக உருவாக்கிவிட்டவர்கள் அவர்கள்தான்.

உளம் தளராமல் , மனம் குழம்பாமல் தந்த்தனியாய்க்கூடக் கதைத்துத் தெளிவூட்டி , அன்போடு எங்களை அரவணைத்து நல்லவழிப்படுத்திய தளபதி அவள். போகும் போதுகூட எங்கள் மனங்களில் எந்தச் சந்தேகத்தியும் அவள் கேள்விக்குறியாக விட்டுவிட்டுப் போகவில்லை.

பூவரசங்குளம் சண்டையில் சன்னங்கள் துளையிட்ட ஆழமான வடுக்களைத் தாங்கியதால் நிரைகுறைந்து போயிருந்தது அவளது மேனி.

எவ்வளவோ எல்லாம் சாதிக்கவேண்டும் என்ற அவளின் உணர்வின் வேகத்திற்கு , அந்த புண்பட்ட உடலால் ஈடுகொடுத்து இயக்க முடியவில்லை பாவம்.

என்றாலும் நளாயினி ஓய்ந்தாளில்லை. தன்னுடைய சக்திக்கு மீறியும் அவள் செயற்ப்பட்டால். உடலை வருத்தி , வருத்தித்தான் உழைத்தாள்.

கடற்புலிகள் மகளிர் படையணி குறுகிய காலத்தில் கண்ட இந்தப் பெருகிய வளர்ச்சியானது அதனுடைய அடிவேரில் தன்னுடைய உயிரையே உருக்கிவார்த்த அவளது உழைப்பின் பெறுபேறு என்றுதான் சொல்ல வேண்டும்.

மேற்கில்…..

இந்துமாசமுத்திரத்தின் தொடுவானத்தைச் செவ்வானமாக்கிவிட்டு , சூரிய தேவன் ஆபிரிக்காவுக்குப் போய்விட்டுகிற அந்திப்பொழுது.

கிழக்கு வேனில் நிலவு நங்கை இரவு உணவுக்குப் புறப்படுவாள்.

வளர்பிறையாய்….. தேய்பிறையாய்…. முழுநிலவாய் அவள் வருவாள். சில நாட்களில் வராமலும் விடுவதுண்டு.

ஆனால்…..

நளாயினி கடலுக்கு வராமல் ஒரு நாளும் விடாள்.

60 கடல்மைல் வேகத்தில் வீசும் கடற்காற்று சில்லிடும்.

நீர்பதம் செறிந்த உவர்க்கார்ரின் வருடலில் மேனி சிலிர்க்கும்.

அமைதியாக,அல்லது ஆர்பரித்து அலைக்கரம் வீசி எங்கள் நீர் நங்கை நிலைமைகளோடு பாசம் பேசுவாள்.

உடலுறையும் அந்தக் குளிரில் நளாயினியும்–மங்கையும் தோழிகளோடு கடலில் இறங்குவார்கள்.

பகலெல்லாம் எமக்கு பயிற்சி தந்து ஓயாமல் இயங்குகின்ற அவர்கள் , இரவான பின்னர்தான் எம்மை ஓய்வாக உறங்கவிட்டு தமக்காகப் பயிற்சி எடுக்கக் கடலுக்குப் போவார்கள்.

கடல்சார்ந்த எந்த அறிவும் இல்லாமல் தான் அவர்கள் கடற்புலிக்கு வந்தார்கள். புதிய போராளிகளுக்குப் பயிற்சி வழங்கும் அதேவேளையில் கடலுக்கு அவர்களும் புதியவர்களே…!

கனிந்து பழுத்த மீனவக் கிழவர்கள் கடலோரங்களில் குந்தியிருக்க , மெல்லக் கதை கொடுப்பாள் நளாயினி.பொக்கை வாய் திறந்து,தன வீரதீரங்களைப் பேசத் தொடங்கும். கடல்பற்றி,கடலின் சுழிகளைப் பற்றி,நீரோட்டங்கள் பற்றி

நடுக்கடல் மர்மங்கள் பற்றி ஆழ்கடல் இரகசியங்கள் பற்றி கிழவர்களது முதிர்ந்த அறிவினை அவள் உறிஞ்சிக் கறப்பாள்.

பின்னர் அவற்றை எங்களுக்குப் பருகத்தருவாள்.

பிள்ளைகளுக்கு எதையும் சொல்லிக் கொடுக்க முன்னர் அதனை நாங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்று சொல்லுவதோடு நில்லாமல் , அவர்கள் செய்யவும் முனைந்தார்கள்.

மீனவர்களை வெல்லவேண்டுமென்று நளாயினிக்கு ஆசை. திரண்ட அலைகளோடு போராடி அவள் வழித்து நீந்துவாள்.கைகள் சோறும். உடலியக்க சத்தியின் கொள்ள்ளளவு குறையவும் அவள் தொடர்ந்து முன்னேறுவாள். கால்கள் சோரும். வல்லு இழந்த உடல்,வலு நிறைந்த மனதோடு முரண்டு பிடிக்கும்.

மனந்தளராது நீந்திக் கடலலைகளை வெல்ல முயன்றும் முடியாமற் போய்,உடல் துவண்டு களைத்தவளை நாங்கள்தான் கரை சேர்த்தோம் பலதடவைகள்.

அவள் பாவம்.எவ்வளவு சுமைகளைத்தான் தனியொருத்தியாக அவள் தாங்குவாள்…?

நிர்வாகத்தைக் கவனித்தாள். நிதியைக் கவனித்தாள். படைகளைக் கவனித்தாள்.பயிற்சிகளையும் கவனித்தாள். அரசியலையும் கவனித்தாள்.சண்டைகளையும் கவனித்தாள்.எங்களது உணவைக் கவனித்து,உடைகளையும் கவனித்ததோடு ஒவ்வொரு பிள்ளையின் உள்ளத்தையும் கவனித்தாள்.

எல்லா இடங்களிலும் தானே நின்றாள்.எல்லாப் பாரங்களையும் தானே சுமந்தால்.

நாளாயினையைப் பார்த்து நாங்கள் பிரபித்திருக்கின்றோம்.

எங்களது மகளிர் படையணி கடலில் வளர்ந்த ஒவ்வொரு துளிர்ப்பிலும் அவளது குருதியும் வியர்வையும்தான் கலந்திருக்கிறது.

அவர்களை எக்காலத்திலும் நாங்கள் மறக்கவே முடியாது.

111

111

111

111

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.