கடற்கரும்புலி மேஜர் ஜெகநாதன்,கடற்கரும்புலி கப்டன் இளையவள் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!!

செவ்வாய் மார்ச் 30, 2021

யாழ் மாவட்டம் காங்கேசன்துறைத் துறைமுகத்திலிருந்து திருகோணமலை துறைமுகத்தை நோக்கி 30.03.1996 அன்று ரோந்து சென்ற சிறிலங்கா கடற்படையின் கடற்கலம் கொண்ட அணியினரை யாழ் மாவட்டம் சுண்டிக்குளக் கடற்பரப்பில் வழிமறித்து சிறீலங்கா கடற்படை அணியின் அதிவேக டோறாப் பீரங்கிக் கலம் மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் ஜெகநாதன், கடற்கரும்புலி கப்டன் இளையவள் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 25 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

கடற்கரும்புலி மேஜர் ஜெகநாதன்
சங்கரப்பிள்ளை தவராசா
பத்தினிப்பாய், பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 30.03.1996

கடற்கரும்புலி கப்டன் இளையவள்
இராசலிங்கம் இராஜமலர்
உவர்மலை, திருகோணமலை
வீரச்சாவு: 30.03.1996

இவர்களுடன் இந்த வெற்றிகர கடற்சமரில் லெப். கேணல் குணேஸ் (எழில்வண்ணன்), லெப். கேணல் நிமல் உட்பட பதினெட்டு கடற்புலிப் போராளிகளும் கடலிலே காவியம் படைத்தனர்.

111

கடற்புலி லெப்.கேணல் எழில்வண்ணன் (குணேஸ்)
சிவலிங்கம் முரளிதாஸ்
தும்பளை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.03.1996

கடற்புலி லெப்.கேணல் நிமல்
பரமநாதன் இளங்கோவன்
ஊரிக்காடு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.03.199

கடற்புலி மேஜர் மலர்மொழி
குழைந்தைவடிவேல் அகிலமலர்
மாவத்தை, பொலிகண்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.03.1996

கடற்புலி கப்டன் இராவணன்
சோதிராசா வினோதரன்
மாவடிவேம்பு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.03.1996

கடற்புலி லெப்டினன்ட் செல்வக்குமார்
முருகையா விஜயராஜ்
கௌதாரிமுனை, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 30.03.1996

கடற்புலி லெப்டினன்ட் குமுதினி
தாண்டவன் ஆனந்தசோதி
கற்றன், நுவரேலியா, சிறிலங்கா
வீரச்சாவு: 30.03.1996

கடற்புலி லெப்டினன்ட் சீத்தா
ஆரோக்கியநாதர் சுதர்சனா
குருநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.03.1996

கடற்புலி மேஜர் கனியன்
திருஞானசம்பந்தர் விக்கினேஸ்வரன்
பிறவுன்றோட், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.03.1996

கடற்புலி மேஜர் மோகன்
சிவபாலு பாஸ்கரன்
வேம்படி, உடுத்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.03.1996

கடற்புலி கப்டன் திருமாறன்
ஜெயசீலன் டன்சன்
02ம்-வட்டாரம், அல்லைபிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.03.1996

கடற்புலி கப்டன் நல்லவன்
கோபாலப்பிள்ளை பூபாலசிங்கம்
தேத்தாதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.03.1996

கடற்புலி கப்டன் மிதுனன்
கருப்பையா பாலகிருஸ்ணன்
கட்டைப்பறிச்சான், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 30.03.1996

கடற்புலி லெப்டினன்ட் எழுமதி
இம்மானுவேல் கலிஸ்ரா
நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம
வீரச்சாவு: 30.03.1996

கடற்புலி மேஜர் செம்மலை
மரியநாயகம் இதயராஜ்
13ம் வட்டாரம், நெடுந்தீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.03.1996

கடற்புலி மேஜர் மன்னவன்
சந்தியாப்பிள்ளை யூட்ராஜ்குமார்
இராசவின்தோட்டம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.03.1996

கடற்புலி கப்டன் கரன்
சந்திரசேகரம் தர்மக்கண்ணன்
நாகர்கோவில் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.03.1996

கடற்புலி கப்டன் கனகா
பத்திமனோகரன் சர்மினா
வசாவிளான், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.03.1996

கடற்புலி கப்டன் ஆனந்தி
கந்தையா யோகேஸ்வரி
4ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.03.1996

கடற்புலி லெப்டினன்ட் மகேஸ்வரி
இராசகுரு ரேவதி
மயிலியதனை, தெண்டமனாறு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.03.1996

கடற்புலி லெப்டினன்ட் பிருந்தா
பரமசாமி நிமலாவதி
கச்சாய் தெற்கு, கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.03.1996

மேஜர் நெடுமாறன்
இராமு சேகர்
இருட்டுமடு, உடையார்கட்டு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.03.1996

கப்டன் புலிக்குட்டி
சுகுமார் சுஜிதரன்
நாவக்குழி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.03.1996

                                               {+}{+}{+}{+}{+}{+}{+}

லெப்.கேணல் பாக்கியன் (பாக்கி)
தேவசகாயம் ஜேசுதாசன்
வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.03.2000

111

யாழ்ப்பாணம் வத்திராயன் பகுதியில் “ஓயாத அலைகள் – 03“ நடவடிக்கையின்போது வான்படையினர் கிபீர் வானூர்தி மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு

செயல்வீரன் லெப். கேணல் பாக்கியன்

இவன் வடமராட்சிக் கிழக்கின் வெற்றிலைக்கேணி மண் பெற்றெடுத்த புதல்வன். தன் சொந்தக் கிராமத்தை எதிரியிடமிருந்து மீட்டெடுத்த பெருமையோடு தன் போராட்ட வரலாற்றின் பக்கங்களை மூடிக்கொண்ட காவிய நாயகன். ஆனாலும் தொடர் அலையாய் போராளிகளினதும் மக்களினதும் மனங்களில் நிறைந்து அன்றும் இன்றும் நிற்பவன்.

1983ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகளின் அணியில் இணைந்து தன் களப்பயிற்சிகளை மேற்கொள்வதற்காக இந்திய மண்ணில் கால் பதிக்கின்றான். அன்றுதொட்டு அவனின் இறுதிநாள்வரை அவனை முழுமையாக அறிந்தவன், புரிந்தவன், தெரிந்தவன் என்ற ரீதியில் அவன் பற்றிய ஒரு சில வரிகளை எழுதுவது எனது கடமையில் ஒன்றாகக் கருதுகிறேன்.

இந்திய மண்ணில் தன் அடிப்படைப் பயிற்சிகளை முடித்ததும் போராளிகளை முழுமையாகக் கொண்ட கடற்புலிகளின் அணியை உருவாக்குவதற்காக தெரிவு செய்யப்பட்ட 42 உறுப்பினர்களில் ஒருவனாகப் பாக்கியம் தெரிவு செய்யப்படுகின்றான். சென்னையின் கடலோரத்தில் முகாமிட்டு 6 மாதங்கள் கடினமான பயிற்சிகளை மேற்கொள்கின்றான். இதன் பின் இவ்வணி இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஓர் அணி வடமராட்சிக்கு தாக்குதல் நடவடிக்கைக்காக வருகின்றது. மற்றைய அணி இந்தியாவில் நின்று படகோட்டும் பணியை மேற்கொள்கின்றது. பாக்கியம் படகோட்டும் பணியில் இணைந்து திறமையான ஓர் சாரதியாகத் தன் பணிகளைத் தொடங்குகின்றான்.

இன்றுபோல் கடற்புலிகளிடம் வளங்கள் எதுவும் அன்று இருக்கவில்லை. அந்த நிலையிலும் வேகம் குறைந்த விசைப்படகுடன் ஆழி கடந்து அரும்பணி செய்தவன். காற்றையும், கடலையும் இயற்கையின் துணைகொண்டு அளக்கும் ஆற்றல் நிறைவாகக் கொண்டவன். வெள்ளிகளின் துணைகொண்டு விடிவிற்காய், தன் படகினைச் சொல்லும் இடங்களிலெல்லாம் கரை சேர்த்து நின்றவன். எத்தனையோ சந்தர்ப்பங்களில் எதிரியைக் கடலில் எதிர்கொண்ட போதும் சாதுரியமாகத் தன்படகை ஓட்டிக் கரை சேர்த்தவன்.

1986 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் தமது பயிற்சிகளை மேற்கொண்ட முதலாவது பெண் புலிகளின் அணியை மன்னாருக்குக் கொண்டு வரும் குழுவில் ஒருவனாக வருகின்றான். வங்காலைக்கு மேல் இவனின் படகு விபத்தொன்றைச் சந்திக்கின்றது. கோர அலைகள் படகை மூழ்கடிக்க நின்றவேளையில் பாக்கி தன் தோழன் பழனியுடன் சேர்ந்து அப்பத்துப் பெண் போராளிகளையும் காப்பாற்றிக் கரை சேர்க்கின்றான். இது தமிழீழ விடுதலைப் புலிகள் வரலாற்றில் பதியப்பட்டிருக்கும் சாதனையில் ஒன்றாகும்.

1987 ஆம் ஆண்டு தைத்திங்கள் 5ஆம் நாள் தமிழீழ மண்ணில் மீண்டும் தன் கால்களைப் பதித்துப் போராட்டத்தை முன்னெடுக்க இந்திய மண்ணை விட்டு வெளியேறிய அண்ணனைச் சுமந்து வந்த படகிற்குப் பாதுகாப்பிற்கு வந்த வண்டியின் ஓட்டியாக வந்த பாக்கியை நான் பெருமையோடு பார்க்கின்றேன்.

இந்திய இராணுவம் மணலாற்றுக் காட்டையும், எல்லையில் அமைந்த பெருங்கடலையும் காவல் காத்து நிற்க இவர்களின் படகு வெடிப்பொருட்களோடு முல்லையின் கரைக்கு விரைந்து வருவதும், விழுப்புண்ணடைந்த வீரரை அக்கரைக்கு அடுக்கடுக்காய் சுமந்து நின்றதும், அன்றைய இவர்களின் அண்ணனையும் அவன் வாழ்ந்த காட்டையும் காத்து நின்றதும் இன்றும் என்னால் மறக்க முடியவில்லை.

இந்திய நாட்டில் இலட்சியத்திற்காய் இவன் இருந்த சிறை வாழ்க்கையும், சிறையுடைத்து நாடு திரும்பிய இவனின் வீரமும் இன்றும் என் மனதில் பதிந்து தான் நிற்கின்றன.

சிறையுடைத்து நாடு திரும்பிய பின்னும் தன் உறுதி குலையாது நிறைவாக எங்கள் அணியில் செயலாற்றி நின்றவன்.

கடற்சமர் பலவற்றிற்குப் படகோட்டியாக பல களமுனைகளைக் கண்டவன். எந்த ஒரு களத்திலும், தளத்திலும் தனக்குப் பணிக்கப்படும் பொறுப்புக்களை நிறைவுடன் செயற்படுத்தும் திறன் கொண்டவன். போராளிகளை மதித்தவன். அதனால் போராளிகளால் மதிக்கப்பட்டவன்.

“ஓயாத அலை – 03” இல் வடமுனைப்போரில் இவனிடம் என்னால் வழங்கப்பட்ட பணிகள் ஏராளம் ஏராளம். தனக்குத் துணையாய் நின்ற எல்லைப்படையினரின் உதவியுடன் களத்திற்கு வேண்டிய போராளிகளையும், படைக்கலன்களையும் நீரேரி வழியாகத் தளத்திற்கு நகர்த்திய இவனின் பணி அளப்பரியது. ஆனையிறவை வெற்றி கொள்வதற்காக எம்மால் மேற்கொள்ளப்பட்ட தரையிறக்கத்திற்கு இவன் அச்சாணியாக விளங்கியவன். “நீங்கள் பாக்கி அண்ணனை எங்களோடை அனுப்புங்கோ நாங்கள் செய்து முடிக்கிறம்” என்று எல்லைப்படையினர் என்னிடம் அடிக்கடி கூறுவதில் இருந்து எந்த அளவிற்கு மக்களால் மதிக்கப்பட்டவன் என்பதை நான் இலகுவில் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.

தனது இறுதி நாளில் கூட நாகர் கோவிற்பகுதியில் நாம் மேற்கொள்ள இருந்த புதிய நடவடிக்கை ஒன்றிற்கான பெரும்பணியை மேற்கொள்வதற்காகத்தான் எல்லைப்படையினருடன் செம்பியன்பற்றுக்குச் சென்றவன். அதுவே அவனின் இறுதிப் பணியாகவும், பயணமாகவும் இருந்ததை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை.

பாக்கி……

“உன்னரும் சுற்றமும் சூழலும்
உன் உடல் தாங்கிய பேழையைச் சூழ்ந்து நிற்க
என்னரும் செல்வமே எனக்கதறிய இளம் துணைவியின்
அழுகைக் குரலின் மத்தியில்
உன் பிஞ்சு மழலையின் ஈனக்குரல்
ஐயகோ…… தாங்க முடியவில்லையே”

இன்று இவரின் பிரிவைத் தாங்காது தவிக்கும் மனைவி, குழந்தை, உறவினர்கள் அனைவருடன் அவர்களின் துயரில் பங்குகொள்வதுடன் கடற்புலிகளின் சார்பிலும், எனது சார்பிலும் கடல்மறவன் லெப். கேணல் பாக்கிக்கு எனது வீர வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

நினைவுப்பகிர்வு:
கேணல் சங்கர் சூசை
சிறப்புத் தளபதி
கடற்புலிகள்,
தமிழீழ விடுதலைப புலிகள்.
தமிழீழம்.

                                                   {+}{+}{+}{+}{+}{+}{+}

111

இன்றைய தினம் தாயக மண்ணில் வெவ்வேறு பகுதியிலும்,வெவ்வேறு கள சம்பவங்களின் போதும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்.

லெப்டினன்ட் மெய்விழி
இராசதுரை சுமதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.03.2008

வீரவேங்கை இலக்கியன்
சிறீஅம்பிகைபாலன் சிறீவாசன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 30.03.2008

கப்டன் ஈழவேந்தன்
மரியதாஸ் அந்தோனி
மன்னார்
வீரச்சாவு: 30.03.2007

2ம் லெப்டினன்ட் ரேணுகன்
திருச்செல்வம் யோகநாதன்
4ம்வட்டாரம், 40ம் கிராமம், திக்கோட்டை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.03.2001

லெப்டினன்ட் மனோறஞ்சிதன் (மனோறஞ்சன்)
பொன்னுத்துரை சந்திரகுமார்
வெல்லாவெளி, கோவில்போரதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.03.2001

வீரவேங்கை ஒளிமகள்
கோவிந்தராசா செல்வமணி
2ம் பகுதி, திருவையாறு, கிளிநொச்சி
வீரச்சாவு: 30.03.2000

மேஜர் அன்புமணி
கனகரத்தினம் சத்தியசுகி
தச்சன்தோப்பு, கைதடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.03.2000

கப்டன் ராகுலன்
சிங்கரட்ணம் சதீஸ்குமார்
நீர்வேலி தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.03.2000

எல்லைப்படை 2ம் லெப்டினன்ட் பெரியதம்பி
யோசப் ஞானரூபன்
சக்கோட்டை, அல்வாய் மேற்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.03.2000

வீரவேங்கை யாழமுதன்
அந்தோனிப்பிள்ளை மெலியான்ஸ்
கற்கடந்தகுளம், முருங்கன் மன்னார்
வீரச்சாவு: 30.03.2000
 
கப்டன் தயானந்தன்
துரைராஜா சுரேந்திரன்
அமிர்தகழி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.03.2000

லெப்டினன்ட் மதியன் (கன்னியழகன்)
இராமச்சந்திரன் இலங்கேஸ்வரன்
புளியங்குளம், வவுனியா
வீரச்சாவு: 30.03.2000

லெப்டினன்ட் தேன்மொழியன்
சண்முகம் புஸ்பநாதன்
திருவையாறு, கிளிநொச்சி
வீரச்சாவு: 30.03.2000

வீரவேங்கை இசையூரான்
மாசிலாமணி நிவஸ்பிறவுண்
இளவாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.03.2000

வீரவேங்கை வாணன்
நல்லதம்பி சிறிகாந்தன்
திருநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 30.03.2000

வீரவேங்கை அறிவுபுகழன்
இராசேந்திரன் பிரபாகரன்
உடுவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.03.2000

லெப்டினன்ட் ஈழமதி
சிவமூர்த்தி சிவஜா
அச்சுவேலி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.03.1999

2ம் லெப்டினன்ட் மதி
விஜயரத்தினம் தயாபரன்
கனகராயன்குளம், வவுனியா
வீரச்சாவு: 30.03.1998

வீரவேங்கை அகரச்சுடர்
கந்தலிங்கம் கேமா
புளியங்கூடல், ஊர்காவற்றுறை யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 30.03.1998

கடற்புலி மேஜர் மலர்மொழி
குழைந்தைவடிவேல் அகிலமலர்
மாவத்தை, பொலிகண்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.03.1996

கடற்புலி கப்டன் இராவணன்
சோதிராசா வினோதரன்
மாவடிவேம்பு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.03.1996

கடற்புலி லெப்டினன்ட் செல்வக்குமார்
முருகையா விஜயராஜ்
கௌதாரிமுனை, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 30.03.1996

கடற்புலி லெப்டினன்ட் குமுதினி
தாண்டவன் ஆனந்தசோதி
கற்றன், நுவரேலியா, சிறிலங்கா
வீரச்சாவு: 30.03.1996

கடற்புலி லெப்டினன்ட் சீத்தா
ஆரோக்கியநாதர் சுதர்சனா
குருநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.03.1996

கடற்புலி மேஜர் கனியன்
திருஞானசம்பந்தர் விக்கினேஸ்வரன்
பிறவுன்றோட், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.03.1996

கடற்புலி மேஜர் மோகன்
சிவபாலு பாஸ்கரன்
வேம்படி, உடுத்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.03.1996

கடற்புலி கப்டன் திருமாறன்
ஜெயசீலன் டன்சன்
02ம்-வட்டாரம், அல்லைபிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.03.1996

கடற்புலி கப்டன் நல்லவன்
கோபாலப்பிள்ளை பூபாலசிங்கம்
தேத்தாதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.03.1996

கடற்புலி கப்டன் மிதுனன்
கருப்பையா பாலகிருஸ்ணன்
கட்டைப்பறிச்சான், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 30.03.1996

கடற்புலி லெப்டினன்ட் எழுமதி
இம்மானுவேல் கலிஸ்ரா
நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம
வீரச்சாவு: 30.03.1996

கடற்புலி மேஜர் செம்மலை
மரியநாயகம் இதயராஜ்
13ம் வட்டாரம், நெடுந்தீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.03.1996

கடற்புலி மேஜர் மன்னவன்
சந்தியாப்பிள்ளை யூட்ராஜ்குமார்
இராசவின்தோட்டம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.03.1996

கடற்புலி கப்டன் கரன்
சந்திரசேகரம் தர்மக்கண்ணன்
நாகர்கோவில் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.03.1996

கடற்புலி கப்டன் கனகா
பத்திமனோகரன் சர்மினா
வசாவிளான், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.03.1996

கடற்புலி கப்டன் ஆனந்தி
கந்தையா யோகேஸ்வரி
4ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.03.1996

கடற்புலி லெப்டினன்ட் மகேஸ்வரி
இராசகுரு ரேவதி
மயிலியதனை, தெண்டமனாறு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.03.1996

கடற்புலி லெப்டினன்ட் பிருந்தா
பரமசாமி நிமலாவதி
கச்சாய் தெற்கு, கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.03.1996

மேஜர் நெடுமாறன்
இராமு சேகர்
இருட்டுமடு, உடையார்கட்டு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.03.1996

கப்டன் புலிக்குட்டி
சுகுமார் சுஜிதரன்
நாவக்குழி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.03.1996

2ம் லெப்டினன்ட் இளங்குயில்
ஆனந்தராசா உமாதேவி
தலைமன்னார், மன்னார்
வீரச்சாவு: 30.03.1996

2ம் லெப்டினன்ட் கோமதி
சாமித்தேவர் இலக்குமிபிரமிளா
154ம் கட்டை, முறுகண்டி, கிளிநொச்சி
வீரச்சாவு: 30.03.1996

கப்டன் ரதீஸ்பரன் (ரதீஸ்)
கோபாலப்பிள்ளை செல்வராஜா
திருக்கோவில், அம்பாறை
வீரச்சாவு: 30.03.1993

கப்டன் உருத்திரன் (பொஸ்கோ)
விஜயரத்தினம் தயாளன்
ஸ்கந்தபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 30.03.1993

லெப்டினன்ட் யேசு
செபஸ்தியான் யோசப் அன்ரனி
உப்பளம், ஆனையிறவு, கிளிநொச்சி
வீரச்சாவு: 30.03.1991

லெப்டினன்ட் ஜான்
செபமாலை ஸ்ரான்லி
சிலாவத்தை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.03.1991

லெப்டினன்ட் அருண்
கருப்பையா நித்தியானந்தஈஸ்வரன்
திருவையாறு, கிளிநொச்சி
வீரச்சாவு: 30.03.1991

வீரவேங்கை விஜி
வேலுப்பிள்ளை பரமேஸ்வரன்
கற்சிலைமடு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.03.1991

வீரவேங்கை புனிதன்
பியசேன விஜயன்
குருக்களூர், வவுனியா
வீரச்சாவு: 30.03.1991

வீரவேங்கை நிதி
வே.பரமேஸ்வரன்
கற்சிலைமடு, ஒட்டுசுட்டான் முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.03.1991

வீரவேங்கை சைமன்
மிக்கேல் திவ்வியநாதன்
நடுக்குடா, பேசாலை, மன்னார்
வீரச்சாவு: 30.03.1991

வீரவேங்கை குஞ்சன்
இராமலிங்கம் கமலேஸ்வரன்
சிலாவத்தை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.03.1991

வீரவேங்கை ரவி
சுப்பிரமணியம் ஜெயநேசன்
3ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.03.1991

வீரவேங்கை துசான்
இசுதோர்வாசிங்டன் மோகனராசா
ஆனந்தபுரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.03.1991

வீரவேங்கை கண்ணன்
மாசிலாமணி ராஜேஸ்வரன்
கொக்குத்தொடுவாய், மணலாறு
வீரச்சாவு: 30.03.1991

வீரவேங்கை பைரவி
நாகேந்திரன் சதீஸ்குமார்
நெடுந்தீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.03.1991

வீரவேங்கை பொஸ்கோ
சந்திரன் பத்மநாதன்
முருங்கன், மன்னார்
வீரச்சாவு: 30.03.1991

வீரவேங்கை மிராண்டா
பூலோகசிங்கம் உதயன்
மன்னார்
வீரச்சாவு: 30.03.1991

வீரவேங்கை மணிவண்ணன்
கதிர்காமத்தம்பி ஜெயசீலன்
கண்ணன் கிராமம், வாழைச்சேனை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 30.03.1989

ஈரோஸ் மாவீரர் ஜெகன்
அன்ரனி எலியாஸ்குருஸ்
பறப்பாங்கண்டல், மன்னார்
வீரச்சாவு: 30.03.1987

ஈரோஸ் மாவீரர் சங்கர்
முனியாண்டி காமராஜ்
கரிசல், மன்னார்
வீரச்சாவு: 30.03.1987

2ம் லெப்டினன்ட் நிமால்
பெர்னாண்டோ றோமன் சுரேஸ்குமார்
திருநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 30.03.1986

வீரவேங்கை ராஜன்
பொன்னுத்துரை நடேசலிங்கம்
கும்புறுப்பிட்டி, திருகோணமலை.
வீரச்சாவு: 30.03.1986

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

111