கடற்கரும்புலி மேஜர் கடலரசன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்!!

வெள்ளி அக்டோபர் 30, 2020

சிறீலங்கா கடற்படையின் ‘துன்கிந்த’ எரிபொருள் வழங்கல் கப்பல் மூழ்கடிப்பில் வீரச்சாவைத் தழுவிய கடற்கரும்புலி மேஜர் கடலரசன், கடற்கரும்புலி மேஜர் கஸ்தூரி, கடற்கரும்புலி கப்டன் அன்புமலர், கடற்கரும்புலி கப்டன் கனியின்பன் உட்பட ஏனைய சம்பவங்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

கடற்கரும்புலி மேஜர் கடலரசன் (சமுத்திரன்)
தம்பிப்பிள்ளை நமசிவாயம்
8ம் வட்டாரம், சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.10.2001

கடற்கரும்புலி மேஜர் கஸ்தூரி
தங்கராசா சுதாசினி
பொன்னாலை மேற்கு, சுழிபுரம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.10.2001

கடற்கரும்புலி கப்டன் கனியின்பன்
மயில்வாகனம் சிறிகாந்
வத்திராயன், உடுத்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.10.2001

கடற்கரும்புலி கப்டன் அன்புமலர் (கேசவி)
பொன்ராசா அன்பழகி
வசாவிளான் யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.10.2001

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

111