கடற்கரும்புலி மேஜர் குமரவேல் வீரவணக்க நாள்!

ஞாயிறு செப்டம்பர் 01, 2019

01.09.2001 அன்று யாழ். மாவட்டம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறீலங்கா கடற்படையின் நீரூந்து விசைப்படகு மீது ஊடுருவி மேற்கொண்ட தாக்குதல் முயற்சியின்போது வீரச்சனைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் குமரவேல்/மதி ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

யாழ். பருத்தித்துறைக் கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் சிறீலங்கா கடற்படையின் நீரூந்து விசைப்படகு ஒன்றினைத் தாக்கியழிக்கும் நடவடிக்கைக்கு சென்றவேளை தேசத்துரோகி ஒருவரின் காட்டிக் கொடுப்பினால் தாக்குதல் திட்டத்தினை ஊகித்துக் கொண்ட சிறிலங்கா கடற்படையினர் அப்பகுதியில் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொது மக்களை தமது படகில் ஏற்றியிருப்பதை தெரிந்து கொண்டு,...

மக்கக்களிற்கு பாதிப்பு ஏற்படாதவகையில் மக்களைக் காத்து கடற்படைப் படகிற்கு தொலைவாக வைத்து தனது படகினை தகர்த்து வீரச்சாவினைத் தழுவிக்கொண் டார் கடற்கரும்புலி மேஜர் குமரவேல்.

விடுதலையின் கனவுகளுடன் பல வெற்றிகளுக்கு வித்திட்டு காற்றோடு கலந்திட்ட உயிராயுதம் .!

தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!