கடற்கரும்புலி மேஜர் தில்லையன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!!

ஞாயிறு அக்டோபர் 25, 2020

திருகோணமலை துறைமுகத்தில் காவியமான கடற்கரும்புலிகள் மேஜர் நளினன் கப்டன் ஜெயராஜ் மற்றும் கடற்புலி 2ம் லெப்.மதன் வவுனியாவில் காவியமான மேஜர் திருமகன் ஆகியோரின் 24ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

25.10.1996 அன்று திருகோணமலை துறைமுக நுழைவாயிலில் வைத்து சிறிலங்கா கடற்படைக்குச் சொந்தமான “டோறா” அதிவேக பீரங்கிப் படகினைத் தகர்த்து மூழகடித்து,

1.கடற்கரும்புலி மேஜர் தில்லையன் (நளினன்) (தெய்வேந்திரன் யோகேஸ்வரன்-மூதூர்,திருகோணமலை)

2.கடற்கரும்புலி கப்டன் ஜெயராஜ் (பெரியதம்பி) (கந்தசாமி கோபாலகிருஸ்ணன்-காரைநகர்,யாழ்ப்பாணம்)

3.2ம் லெப்டினன்ட் மதன் (நாகராசா குகதாசன்-விநாயகபுரம், அம்பாறை) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

இதே நாள் வவுனியா கோட்டத்தில் சிறீலங்கா படையினருடனான மோதலின்போது,

மேஜர் திருமகன் (விஜேய்) (நவரட்ணராஜா நாகராசா-யாழ்ப்பாணம்) என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.


111

111

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

111