கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரிப்பு முல்லைத்தீவில்!

புதன் ஓகஸ்ட் 21, 2019

முல்லைத்தீவு நகரத்தில் அதிகரித்து வரும் கட்டாக்காலி நாய்களின் தொல்லை காரணமாக நாய்க்கடிக்கு இலக்காவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

முல்லைத்தீவு நகரம்,முல்லைத்தீவு பேருந்து நிலையம் மற்றும் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகளவில் காணப்படுகின்றன.

இதனால் வீதிகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதுடன், பெரும்பாலானோர் நாய்கடிக்கு இலக்காவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.நகரசபை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்