கட்டுப்பாடற்ற வேகத்தில் பயணித்த கார் மின் கம்பத்துடன் மோதி விபத்து!!

செவ்வாய் அக்டோபர் 27, 2020

யாழ்.அச்சுவேலி பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற கோரவிபத்தில் காரில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

கட்டுப்பாடற்ற வேகத்தில் பயணித்த கார் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.சம்பவத்தில் காரில் பயணித்தவர் உயிரிழந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.