கடும் மழையால் அழிவடைந்த செய்கைகளுக்கு நட்ட ஈடு வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை

வெள்ளி சனவரி 22, 2021

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் மழையுடனான வானிலையால் அழிவடைந்த விவசாய செய்கைகளுக்கு நட்ட ஈடு வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடும் மழையுடனான வானிலையால் நெற்செய்கை, நிலக்கடலை, பயறு, கௌப்பி , உளுந்து செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

1760 ஏக்கர் நெற்செய்கையும் 810 ஏக்கர் உளுந்து செய்கையும் 1390 ஏக்கர் நிலக்கடலை செய்கையும் 136 ஏக்கர் பயறு செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் பி.உலகநாதன் கூறினார்.

154 ஏக்கர் மரக்கறி செய்கை அழிவடைந்துள்ள நிலையில், மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.