கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிய நிலை

ஞாயிறு செப்டம்பர் 20, 2020

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றாவிட்டால் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிய நிலையேற்படலாம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பிரதம தொற்றுநோயியல் அதிகாரியான வைத்தியர் சுடத்சமரவீர இந்த எச்சரிக்கiயை விடுத்துள்ளார்.

கொரோன வைரசினை கட்டுப்படுத்துவதற்காக பல நாடுகள் நடவடிக்கைகளை எடுத்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்த பலர் கொரோனாவைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட சுகாதார விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் அரசாங்கம் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிய நிலையேற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.