குளவி கூடு கலைந்து தொழிலாளர்கள் மீது தாக்குதல்!!

வெள்ளி மே 22, 2020

லிந்துலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட லிந்துலை மட்டுகலை தோட்டபகுதியில் உள்ள தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த பத்து பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (22) முற்பகல் 11.30மணி அளவில் இடம்பெற்றதாக தெரிவித்தனர்.

குறித்த தோட்டபகுதியில் உள்ள தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த வேளை தேயிலையின் அடிவாரத்தில் இருந்து குளவி கூடு கலைந்து தொழிலாளர்களை தாக்கியுள்ளதாக காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் தெரிவித்தனர்.சம்பவத்தில் காயமடைந்த பத்து பெண் தொழிலாளர்களும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதோடு காயங்களுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் அச்சமடைய தேவையில்லையென வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.