குளவிகள் கொட்டியதினால் 10 பேர் மருத்துவமனையில்!!

வியாழன் ஜூன் 04, 2020

தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 10 பேர் கொட்டகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொட்டகலை பொரஸ்கிறிக் தோட்டத்தில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, இன்று(வியாழக்கிழமை) இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

குறித்த 10 பேரும் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் 10 பேரும் பெண்கள்.