குப்பையிலிருந்து பறந்த தணல் அயல் வீட்டாரின் தென்னை,பனை மீது விழுந்து தீ!!

வெள்ளி ஜூன் 05, 2020

யாழ்ப்பாணம்–தென்மராட்சி,மந்துவில் சின்னச்சந்தைப் பகுதியில் இன்று (05) இரவு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

நபர் ஒருவர் தனது வீட்டுக் காணியை துப்பரவு செய்து குப்பைகளை எரிக்கும் போது காற்று காரணமாக குப்பையிலிருந்து பறந்த தணல் அயல் வீட்டாரின் தென்னை,பனை மீது விழுந்து தீ பற்றி பாரிய விபத்து ஏற்பட்டது என தெரியவருகிறது.

இதைனயடுத்து சம்பவம் தொடர்பில் தீ அணைப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்த தீ அணைப்புப் படை தீயை கட்டுப்படுத்தும் பணியை முன்னெடுத்துள்ளது.