குடிபோதையில் வாகனம் செலுத்தியவர்கள் பற்றிய கணக்கெடுப்பு!

செவ்வாய் ஏப்ரல் 16, 2019

புதுவருட காலத்தில் நாடு பூராகவும் நேற்று (15) தொடக்கம் இன்று (16) வரை மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, குடிபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் பற்றிய கணக்கெடுப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி குடிபோதையில் வாகனஞ்செலுத்தி கைது செய்யப்பட்ட சாரதிகள் 329 பேரும்,  மோட்டார் வாகன வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்கள் 5,519 பேருமாக பதிவாகியுள்ளனரெனப் காவல் துறை ஊடகப்பிரிவினரால் தகவல் வெளியிடப்பட்டுள்ளன.