குடியேறிகளை நாடுகடத்தும் பணி விரைவில் தொடங்கும்!

ஞாயிறு நவம்பர் 24, 2019

மலேசியாவிலிருந்து 7000 சட்டவிரோத குடியேறிகளை நாடுகடத்தும் பணி விரைவில் தொடங்கும் மலேசியாவின் சாபா மாநிலத்தில் உள்ள நான்கு தற்காலிக குடிவரவு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள 7000 சட்டவிரோத குடியேறிகளை நாடுகடத்தும் பணி விரைவில் தொடங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 

Sandakan(மலேசியா)-Zamboanga(பிலிப்பைன்ஸ்) இடையிலான படகு போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் நாடுகடத்தல் நடவடிக்கை நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையில், சாபா மாநில முதல்வர் செரி முகத் ஷபி அப்டல், மலேசிய போக்குவரத்து அமைச்சகத்திடம் படகு பயணத்திற்கான அனுமதியை கோரியுள்ளார். 

“சர்வதேச ஒப்பந்தங்களின் கீழ், நாடுகடத்தல் நடவடிக்கைக்காக குறிப்பிட்ட படகுகளை பயன்படுத்த வேண்டும். ஆனால் அவ்வாறான படகு எம்மிடம் இல்லாததால் மத்திய போக்குவரத்து அமைச்சகத்திடம் அனுமதி கேட்டிருக்கிறோம்,” எனக் கூறியுள்ளார் சாபா மாநில முதல்வர். 

மலேசியாவன் சாபா மாநில சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார் முதல்வர் செரி முகத் ஷபி அப்டல். முறையான ஆவணங்களின்றி மலேசியாவில் சென்று வேலை செய்பவர்கள், விசா முடிந்து பின்னரும் வேலை செய்பவர்கள் சட்டவிரோத குடியேறிகளாக அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.