குடவாழை அரிசி பொங்கல்!

வியாழன் சனவரி 09, 2020

குடவாழை அரிசி குடலை சுத்தப்படுத்தக்கூடியது. செரிமானக்கோளாறை நீக்குவதுடன் வயிற்றுப்புண்ணைக் குணப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல மருந்தாகும்.

தேவையான பொருட்கள்:

குடவாழை அரிசி - கால் கிலோ

கரும்பு வெல்லம் - 200 கிராம்
பச்சை பயிறு - 100 கிராம்

மாதுளம் பழம் முத்துக்கள் - 100 கிராம்

 

குடவாழை அரிசி பொங்கல்


செய்முறை:

கரும்பு வெல்லத்தை பொடித்து கொள்ள வேண்டும்.

குடவாழை அரிசியை 16 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பச்சை பயிரை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பச்சைப் பயிறு, குடவாழை அரிசியை நன்றாக கழுவி குக்கரில் போட்டு 3 டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும்.

அதனுடன் பொடித்த கரும்பு வெள்ளத்தை சேர்த்து குக்கரை மூடி ஐந்து விசில் வந்தவுடன் இறக்கவும். விசில் போனவுடன் மூடியை திறந்து மாதுளம் பழம் முத்துக்களை சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.