கவிஞனாயிருத்தல்

புதன் நவம்பர் 11, 2020

நுண்ணுணர்வுக்காரனின் காட்டில்
கவிதை மழை.
தீப்பெட்டி தேடுகிறாள் மனைவி.
கவிதையையும் சோற்றையும் குழைத்துச்
செருமுகிறார் தந்தை.
புரக்கேறும் அவனின் சொற்களோடு
கட்டுகிற கருக்களை 
கலைக்க விருப்பற்றுத் தவிக்கிறது
பிரசவச் சாமம்.
இரவின் பேரமைதிக்காக 
காத்திருந்து கனிகிறது
மூன்றாம் கண்களின் ஞானக் கனிகள்.
நிசிநிலவிடம் ஒப்பிக்கும் வரிகளில்
உடைந்து விழுகிறது
அடுத்தவர்களுக்கான ஆத்மாவின் ஈரக்குரல்.
” ஒரு கவிஞனயிருக்கும் கணமென்பது
நெருப்பில் நெளியும் புழுவுடற் காலம்.”
- தீபிகா -