லாச்சப்பலில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் 66 ஆவது அகவை நாள் சிறப்பு நிகழ்வு!

புதன் நவம்பர் 25, 2020

தமிழர் வரலாறு தந்ததொரு மாபெரும் தலைவன் தமிழீழ தேசம் பெற்றெடுத்த புதல்வன் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களின் 66 ஆவது அகவை நாள் சிறப்பு நிகழ்வோடு தமிழர் இதயமாம் பாரிஸ் லாச்சப்பலில் தேசம் நோக்கி முன்னெடுக்கப்படும் சனநாயக அரசியல் வழியான செயற்பாடுகளுக்கு வலிமை சேர்க்கும் வகையிலும் 26.11.2020 வியாழக்கிழமை பி.பகல் 14:00 மணி முதல் 17:00 மணி வரை தமிழர்கள் நாம் எழுச்சி பூண்டு ஒன்று கூடுவோம்.
( காவல்துறை அனுமதியுடன் இவ் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது)

எந்த சூழ்ச்சிக்கும், எந்தத் துரோகத்திற்கும் தமிழினம் என்றும் அடிபணியாது.

சத்தியத்தின் வழியில், தர்மத்தின் பாதையில், மாவீரர் தடம் பற்றிப் பயணிப்போம்.

அனைத்துத் தமிழர்களும் ஒன்று சேருங்கள் ( கோவிட் 19 தொற்றுக்கு அமைவாக பாதுகாப்பு (masque ) அணிந்து சுயபாதுகாப்பை பேணிக்கொள்ளவும்.

தொடர்புகளுக்கு :-  
-06.52.72.58.67(தமிழீழ மக்கள் பேரவை -பிரான்சு)

மேலதிக தொடர்புகளுக்கு:-
-01.43.15.04.21(CCTF)
-07.58.71.38.39

தகவல் :-தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு