லெப்.கேணல் இரும்பொறை உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!

செவ்வாய் செப்டம்பர் 03, 2019

03.09.2000 அன்று யாழ். குடாநாட்டில் பல முனைகளின் இருந்து சிறிலங்காப் இராணுவத்தினர் மேற்கொண்ட “ரிவிகிரண” நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் இரும்பொறை உட்பட ஏனைய (120) மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

“ஓயாத அலைகள் 03” தொடர் நடவடிக்கையின் மூலம் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்ட யாழ். நகரின் தென்கிழக்கு மற்றும் தென்மராட்சி பகுதிகளை மீள வல்வளைக்கும் நோக்குடன் “ரிவிகிரண” என்ற இராணுவக் குறியீட்டுப் பெயருடன் சிறீலங்கா இராணுவத்தினரால் பல முனைகளினூடாக பாரிய முன்னகர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த முன்னகர்வு முயற்சிக்கு எதிராக விடுதலைப் புலிகளின் படையணிகள் மேற்கொண்ட முறியடிப்புத் தாக்குதலில் சிறிலங்கா படைத்தரப்பு பாரிய அழிவுகளை எதிர்கொண்டது.

இந்த மோதலின்போது நூற்றுக்கும் மேற்பட்ட சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டும் ஐநூறு வரையான படையினர் படுகாயமடைந்தனர்.

சிறீலங்கா இராணுவத்தினரின் இந்த வல்வளைப்பு நடவடிக்கைக்கு எதிரான சமரில் தீரமுடன் களமாடி 120 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!