லெப்.கேணல் நாளா – மேஜர் வஞ்சியின்பன் வீரவணக்க நாள்!!

செவ்வாய் சனவரி 07, 2020

திருமலைக் கடற்பரப்பில் 07.01.2006 அன்று சிறீலங்கா கடற்படையின் டோறா கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் காவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நாளா–மேஜர் வஞ்சியின்பன் ஆகியோரின் நினைவு வணக்க நாள் இன்றாகும்.

சமாதானத்தில் எமக்கிருந்த அக்கறையாலும், ஆர்வத்தாலும் எமது தாக்குதல்களை தரையில் மட்டுமல்ல, கடலிலும் ஒப்பந்த விதிகளை மீறாமல் நடைமுறைப்படுத்தினோம்.

திருமலையில் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சிறீலங்கா கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு கைதுசெய்ய முற்பட்டவேளை தம்மையும் அழித்து, டோறா எனப்படும் சிறீலங்கா கடற்படையின் அதிவேக தாக்குதற் கலங்களில், திருமலைத் துறைமுகத்தின் விசேட பாதுகாப்பிற்கான பொறிமுறைகளைக் கொண்ட கலத்தை மூழ்கடித்து, அதிலிருந்த 2 கடற்படை அதிகாரிகள் உட்பட 14 கடற்படையினர் கொல்லப்பட தங்கள் உயிர்களை வெடியாக்கிய லெப் கேணல் நளா,மேஜர் வஞ்சி ஆகிய எம் வீரமறவர்களுக்கு இன்றைய நாளில் தலைவணங்குகின்றோம்.

தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…