லெப்.கேணல் வானதி(கிருபா)உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!!

ஞாயிறு மார்ச் 21, 2021

விடுதலைப் போராட்ட வரலாறுகளில் முதன்மையான தமிழீழ விடுதலை போராட்டமானது தன்னகத்தே பெரும் போராளிகள் மக்களின் தியாகங்களை சுமந்த வலராறுகள் நாம் அறிவோம்.

ஆனாலும் மறைமுக கரும்புலிகள் போராளிகளிகளின் உள்ளுணர்வுகளும் தியாகங்களும் பலரது மனங்களுள்ளே மறைந்து போகிறது ஆனாலும் அவர்களின் வாழ்வும் மண்ணிற்க்காய் தம்மை அர்ப்பணித்த தற்க்கொடையும் எம்மையெல்லாம் எம் இலக்கு நோக்கிய பயணத்தில் உந்தி தள்ளும் விசையாக செயற்பட ஏதுவாகிறது.

தாயக களங்களில் சமர்களிலெல்லாம் போராளிகளின் தன்னலமற்ற செயற்பாடுகளே வெற்றிகளை எமதாக்கியது.

குடும்ப வாழ்வில் இணைந்த பெண் போராளிகளாயினும் போராட்ட வாழ்வின் முன்னுதாரணங்களாக மேஜர் நிர்மலா,லெப்.கேணல் கமலி,மேஜர் சுடரேந்தி,லெப்.கேணல் வரதா,கேணல் தமிழ்செல்வி,லெப்.கேணல் இசைப்பிரியா ஆகியோரின் வரிசையில் லெப்.கேணல் வானதியும் இணைந்து கொண்டாள்.

111

ஆம் குடும்ப சுமைகளை தாங்கும் குடும்பத்தலைவிகளாகவும் தாயக சுமைகளை தாங்கும் வீராங்கனைகளாகவும் போராடும் வாழ்வின் ஆதாரங்களாக மனதின் துணிவு எங்கிருந்துதான் கிடைக்க பெற்றது இவர்களிடம்…! சிறுத்தை படையணியின் இரண்டாவது பயிற்சி முகாமிலே பயிற்சிகளை நிறைவு செய்தவள் லெப்.கேணல் கிருபா/ வானதி.

தொடக்க காலம் முதல் லெப்.கேணல் சுதந்திராவின் வழிகாட்டலில் சிறுத்தை படையணிகளால் நடாத்தபட்ட பாரிய வலிந்த தாக்குதல்கள், ஊடுருவி தாக்குதல்கள், வேவு நடவடிக்கைகள் போன்றவற்றில் மிகவும் திறமையாக செயற்பட்டாள்.

சமகாலத்தில் கவிகை, கட்டுரை, நாடகங்களென இவளதுகலைத்திறமைகளும் வெளிவந்து கொண்டிருந்தன. அமைதியான இயல்பிற்கு சொந்தகாரி இவள்.

ஆனாலும் போராளிகளின் மத்தியில் கல, கலப்பாகவும் போராளிகளை மகிழ்வித்த வண்ணமிருப்பாள்.பல சமர்களில் விழுப்புண்களை ஏற்ற உடலுடன் தொடர்ந்தும் களப்பணிகளில் இவளது பயணம் தொடர்ந்தது.

சிறுத்தை படையணிசோதியா படையணியுடன் இணைக்கப்பட்ட பின்னர் வலிந்த தாக்குதல் நடவடிக்கைகான பயிற்சி நடவடிக்கைகள், மாதிரி பயிற்சி நடவடிக்கைகள்களை தானே முன்னின்று நடாத்த சமருக்கான வெற்றிக்கு வழிசமைத்தாள்.மேஜர் சோதியா படையணியில் பிரிகேடியர் துர்க்கா அவர்களின் நிர்வாக பொறுப்பாளாராக பல ஆண்டுகள் பணியாற்றினாள்.

போர் அமைதி காலத்தின் போது யாழ்.மாவட்டத்திற்கு அரசியல் பணிக்காக தெரிவு செய்யப்பட்ட சோதியா படையணி போராளிகளிற்கு பொறுப்பாளாராக நியமிக்கபட்டாள்.

அமைதிக் காலமென்றாலும் பல புல்லுருவிகளின் செயற்பாடுகள், இராணுவ புலனாய்வாளர்களின் ஊடுருவல் முயற்சிகளிலிருந்து பெண் போராளிகளை காக்கும் பணி இவளின் முதன்மை செயற்பாடாகவிருந்தது.

2005 ம் ஆண்டு காலப்பகுதியில் தலைவர் அவர்களின் வேண்டுகோளுக்கமைய தான் வாழ்க்கை துணைவராக நேசித்த புலனாய்வுத்துறை பொறுப்பாளர்களில் ஒருவரான வினோதன் எனும்
போராளியை கரம் பிடித்து திருமணபந்தத்தில்இணைந்துகொண்டாள்.

திருமணபந்தத்தில் இணைந்துகொண்ட போதிலும் தனது கள செயற்பாட்டில் எவ்வேளையிலும் பின் நிற்காது தொடர்ந்தும் சமர்களிலும், நிர்வாக செயற்பாடுகளிலும் உழைத்தாள்.

2006 ம் ஆண்டு பண்ணரசன் எனும் குழந்தைக்கு தாயான போதும், அவளது போராட்டச் செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணமிருந்தன.

இறுதி சமர் வன்னியெங்கும் விரிந்திருந்த போதும், குடும்ப வாழ்வும், களமுனை வாழ்வுமாக இவளது பயணம் தொடர்ந்தது. தான் வளர்த்து விட்ட தோழிகளின் இழப்புக்கள், மக்களின் பேரழிவுகள், தொடர் வான் தாக்குதல்கள், இடப்பெயர்வின் அவலங்கள், மனதினை தாக்கிய போதும் கூட தனது குடும்பம்,தனது குழந்தையென எவற்றையும் எண்ணாது தாயகத்தை எதிரியின் வல்வளைப்பிற்குள் செல்லாது தடுக்கும் பணியில் இரவு பகல் பாராது ஈடுபட்டாள்.

துணைவன் ஒரு சமர் களத்தில், இவளோ எதிரியின் வரவை எதிர்பார்த்து வேறொரு சமர் களத்தில், இவர்களின் குழந்தை செல்வமோ உறவினர்கள்,நண்பர்களின் பராமரிப்பில் மாதமொருமுறை ஒரு சில மணித்துளிகளே குடும்பங்களுடனான சந்த்திப்புக்கள். இப்படியாகத்தான் இறுதிப் போர் காலங்களில் போராளிக்குடும்பங்களின் வாழ்விருந்தது.

இறுதிப் போர்க்காலங்களில் தொடர்ச்சியாக எதிரின் வல்வளைப்புக்களிற்கு எதிரான சமர்களில் ஈடுபட்ட லெப்.கேணல் வானதி 21.03.2009அன்று தாக்குதல் நடவடிக்கை ஒன்றிற்கான திட்டமிடல் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது எதிரியின் எறிகணை வீச்சில் வீரச்சாவை அணைத்துக் கொண்டாள்.

விடுதலைக்காய் வீச்சாகி
நின்றவள் களங்களிலே கனலாகி நின்றவள் சிறுத்தையணியில் சீற்றமுடன் பகையளித்தவள் சோதியா படையணியின் சோதியாய் நின்றவள் கனவுகள் தாங்கி நினைவெல்லாம் நடப்போம்.

நினைவுப் பகிர்வு :- ஈழமதி.

                                                         {*}{*}{*}{*}{*}{*}

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது...

111


2ம் லெப்டினன்ட் தமிழ்ச்சுடர்
யேசுநாயகம் மேரி இருதயமலர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.03.2008

2ம் லெப்டினன்ட் வரதன்
செல்வராசா வரதராசா
கிளிநொச்சி
வீரச்சாவு: 21.03.2008

கப்டன் கஜன்
வில்வரட்ணம் அருந்தவராசா
திருகோணமலை
வீரச்சாவு: 21.03.2008

வீரவேங்கை அமுதவாணி
சுப்பிரமணியம் லோகறஞ்சினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 21.03.2008

கப்டன் கதிரவன்
செல்வராசா செந்தில்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.03.2007

கப்டன் கதிரவன்
செல்வராசா செந்தில்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.03.2007

வீரவேங்கை திலீப்
இராஜரட்ணம் நிர்மல்காந்
பனங்காமம், நட்டங்கண்டல், மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 21.03.2007

வீரவேங்கை தேன்மலர்
இராமலிங்கம் நந்தினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.03.2007

கப்டன் நிவேதன்
வேலுப்பிள்ளை செல்வரூபன்
இத்தியடி, பாண்டியன்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 21.03.2007

கப்டன் வானரசன்
சின்னையா யசோக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.03.2007

வீரவேங்கை வினோத்
பாலசிங்கம் சந்திரமோகன்
மாத்தறை, சிறிலங்கா
வீரச்சாவு: 21.03.2007

லெப்டினன்ட் குகன்
சிறிஸ்கந்தராசா சதீஸ்குமார்
2ம் வட்டாரம், சல்லி, சாம்பல்த்தீவு, திருகோணமலை
வீரச்சாவு: 21.03.2001

மேஜர் தென்றல்
விநாயகம் மகேந்திரன்
கிண்ணியடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.03.2001

மேஜர் கலா (நாவுக்கரசி)
மார்கண்டு காஞ்சனா
குரும்பசிட்டி கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.03.2001

கப்டன் மறவன்
சின்னத்தம்பி கதிர்காமநாதன்
எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.03.2001

எல்லைப்படை வீரவேங்கை ராசா
குலசேகரம் தங்கவேல்
ஆழியவளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.03.2001

எல்லைப்படை வீரவேங்கை ரவி
தம்பிஐயா ரவிராசா
உடுத்துறை வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.03.2001

2ம் லெப்டினன்ட் ராதா
காத்தமுத்து சின்னமுத்து
இறால்ஒடை, வட்டவான், வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.03.2000

கப்டன் யாழ்வேல்
ஆழ்வார்பிள்ளை சரவணபவான்
வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 21.03.1999

லெப்டினன்ட் மதீபன்
இராசதுரை சபேஸ்
வலம்புரம், கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.03.1999

லெப்டினன்ட் ஐயா
பஞ்சாயுதம் நீலகண்டன்
கன்னங்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.03.1998

2ம் லெப்டினன்ட் சியாமணி
யோசப் றோட்டணி
உப்போடை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.03.1998

லெப்டினன்ட் பூமகள்
பெருமாள் சியாமளா
நல்லூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.03.1997

லெப்டினன்ட் வாகரையான் (நேசன்)
சண்முகம் குகனேஸ்வரன்
கொக்குத்தொடுவாய், மணலாறு
வீரச்சாவு: 21.03.1997

கப்டன் அன்பன்
சிறிதரன் சாந்தகுமார்
2ம யூனிட், தருமபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 21.03.1994

லெப்டினன்ட் கம்பன்
இரத்தினம் யோகேஸ்வரன்
2ம் படிவம், கல்மடு, வவுனியா
வீரச்சாவு: 21.03.1994

லெப்டினன்ட் ஜெயக்குமார்
பொன்னுத்துரை உதயகுமாரன்
புலுமைச்சினாதிகுளம், மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 21.03.1994

கப்டன் நம்பி (சுட்டா)
பூபாலப்பிள்ளை லோகிதராஜா
2ம் வட்டாரம், குச்சவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 21.03.1993

கப்டன் முடியரசன் (ரவி)
சித்திரவேல் முத்துலிங்கம்
திருஞானசம்பந்தர் வீதி, திருகோணமலை
வீரச்சாவு: 21.03.1993

லெப்டினன்ட் மெய்யப்பன் (அன்ரன்)
சுப்பையா நாகேந்திரன்
1ம் வட்டாரம் குச்சவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 21.03.1993

லெப்டினன்ட் மறைக்கோன் (விஸ்வநாதன்)
கந்தவனம் நிமலநாதன்
தம்பலகாமம், திருகோணமலை
வீரச்சாவு: 21.03.1993

லெப்டினன்ட் உதயன்
சிவகுமாரசாமி நிர்மலதாஸ்
64ம் கட்டை, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 21.03.1993

மேஜர் ஈஸ்வரன்
கந்தசாமி லிங்கேஸ்வரன்
சந்திவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.03.1992

வீரவேங்கை அலன்
கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன்
மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.03.1992

வீரவேங்கை ராமமூர்த்தி (மேகன்)
செல்லத்தம்பி பரமேஸ்வரன்
காயங்கேணி, மாங்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.03.1992

வீரவேங்கை குகதாஸ்
பொன்னுத்துரை சந்திரகுமார்
துறைநீலாவணை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.03.1992

லெப்டினன்ட் சுதாகர்
தில்லையம்பலம் சிதம்பரம்
கல்மடு, ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 21.03.1992

மேஜர் சதா
நடராஜப்பெருமாள் திலீப்குமார்
வரணி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.03.1991

கப்டன் அப்பன்
சண்முகம் சிறிதரன்
தச்சன்தோப்பு, நாவற்குழி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.03.1991

லெப்டினன்ட் நேதாஜி
இரட்ணலிங்கம் மங்கஜேவரன்
நல்லூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.03.1991

லெப்டினன்ட் கஸ்ரோ
நடேசபிள்ளை செந்தூரன்
பெருமாள்கோவில் தெற்கு ஒழுங்கை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.03.1991

லெப்டினன்ட் சைமன்
நாகராசா மோகனரூபன்
கொக்குவில் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.03.1991

2ம் லெப்டினன்ட் நாதன்
ப.சுந்தாராஜ்
ஜெயபுரம், பல்லவராயன்கட்டு, கிளிநொச்சி
வீரச்சாவு: 21.03.1991

வீரவேங்கை சத்தியமலர்
தேவமலர் டேவிட்
தளவாய், செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.03.1991

வீரவேங்கை பாணன்
பாலசிங்கம் குணபாலன்
திருக்கேதீஸ்வரம் மாந்தை, மன்னார்
வீரச்சாவு: 21.03.1991

வீரவேங்கை சயந்தன்
நவாலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.03.1991

வீரவேங்கை காந்தன்
செல்லையா செல்வகுமார்
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.03.1991

வீரவேங்கை பீற்றர்
சத்தியநாதன் சிறீஸ்கந்தராசா
மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.03.1991

வீரவேங்கை றியாஸ்
இராமலிங்கம் கணேஸ்
தர்மபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 21.03.1991

2ம் லெப்டினன்ட் சுமன்
முத்துராஜா கேதீஸ்வரன்
நல்லூர், பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 21.03.1991

வீரவேங்கை நாயுடு
மல்லாகம், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 21.03.1989

லெப்டினன்ட் சிறைவாசன்
தவமணிநாயகம் முரளிகிருஸ்ணா
மல்லாகம், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 21.03.1989

வீரவேங்கை பெரியராஜன் (ராஜன்)
வி.சந்திரராசா
விளக்குவைத்தகுளம், ஓமந்தை, வவுனியா.
வீரச்சாவு: 21.03.1987

ஈரோஸ் மாவீரர் சாந்தன்
இராசநாயகம் சாந்தகுமார்
நாவலடி, அல்வாய், பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.03.1987

ஈரோஸ் மாவீரர் சின்னப்பரா
பரராசசிங்கம்
வட்டக்கச்சி , கிளிநொச்சி
வீரச்சாவு: 21.03.1987

வீரவேங்கை ஜெகன்
இராசையா துரைசிங்கம்
கோவலி, தம்பலகாமம், திருகோணமலை.
வீரச்சாவு: 21.03.1986

வீரவேங்கை நடா
குழந்தையன் நடராசா
கைதடி வடக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 21.03.1986

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

111