லிட்ரோ கேஸ் நிறுவன பணிப்பாளர் சபைக்கு இடைக்கால தடை உத்தரவு

புதன் மே 15, 2019

லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு நேற்று நியமிக்கப்பட்ட பணிப்பாளர் சபையினர் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. 

நிதியமைச்சர் மங்கள சமரவீரவால் லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு நேற்று புதிதாக பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். 

குறித்த பணிப்பாளர் சபையினர் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றமே இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.