லண்டனில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் விடுதலை!

செவ்வாய் ஏப்ரல் 16, 2019

லண்டன் - லுடன் விமான நிலையயத்தில் வைத்து ​கைது செய்யப்பட்ட இலங்கை பிரஜைகள் நால்வரும் விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த புதன்கிழமை இவர்கள் சர்வதேச விமானம் ஒன்றின் மூலம் லுடன் விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 

இதன்போது அந்த நாட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். 

தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றில் அங்கத்துவம் பெற்றுள்ள சந்தேகத்தில் இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.