லண்டனில் உள்ளரங்கில் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் கூடத் தடை!

வியாழன் அக்டோபர் 15, 2020

லண்டனில் உள்ளரங்கில் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் கூடுவதற்கு மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

ஏலவே இவ்வாறான தடைகள் பிரித்தானியாவின் ஏனைய பகுதிகளில் அமுலில் உள்ள நிலையில் லண்டனில் கொரோனா கொல்லுயிரின் தாக்கம் மோசமடைந்துள்ள நிலையில் இம் முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

எனினும் பூங்காக்கள், வீட்டுத் தோட்டங்கள் போன்ற வெளியரங்குகளிலும், வழிபாட்டுத் தலங்களிலும் மட்டும் ஆறு பேராக மக்கள் கூடுவதற்கு அனுமதிக்கப்படுள்ளது.

 

அதேநேரத்தில் கோவிட் பாதுகாப்பு விதிகளுக்கு அமைய வெளியரங்குகளில் அரசியல் பேரணிகள், ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு தடையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.