லட்சக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் – கொரோனாவை எதிர்த்துப் போராட்டம்

சனி ஏப்ரல் 18, 2020

உலகையை உலுக்கிகொண்டிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் - தமிழகத்திலும் தன் பரவலை பதிவு செய்தவுடன், அதன் தீவிரத்தை உணர்ந்த தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம். சென்னை உட்பட தனது கட்டுப்பாட்டில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் "கொரோனா தடுப்பு பணி" களை தீவிரப்படுத்தியது.

t

அதன்படி பல்வேறு துறைகளில் உழைக்கும் தொழிலாளர்கள் நெருக்கமாக வசிக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் 23/03/2020 முதல் தொடர்ந்து கிருமி நாசினி தெளிப்பதும். கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தமிழ்நாடு அரசு பரிந்துரைத்த கைக் கழுவும் முறை, சமூக விலகல் முறைகளை துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர். 

t

இதன் மூலம் மக்களை கொரோனா தொற்றிலிருந்து தடுக்கும் பணியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அனைத்து ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர்.

t

இதில் வடசென்னை (Division-1) பகுதியின் குடிசை மாற்று வாரியம் சார்பாக தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை மற்றும் வண்ணாரப்பேட்டை ஆகிய இடங்களில் சுமார் 15,000 குடியிருப்புகளில் தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து கிருமி நாசினி தெளித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர்.

t

மக்களும் பொது இடங்களில் கூட்டமாக கூடாமலும் தொடர்ந்து சமூக விலகல் முறை மற்றும் கை கழுவும் முறையை பின்பற்றி தமிழ்நாடு அரசு, அரசு ஊழியர்கள், சுகாதார துறை பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொது சமுகத்திற்கும் உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.