மைலோ குளிர்பானம் அருந்தும் பிரியர்கள் கவனத்திற்கு

ஞாயிறு பெப்ரவரி 10, 2019

இலங்கை மக்களின் நம்பகத்தன்மையை சந்தேக முற வைக்கும் இலங்கை தயாரிப்புகள்.

இதிலுள்ள மைலோ குளிர் பானம் காலவாதியாக இன்னும் அதிக காலம் இருக்கின்றது.மூடிய நிலையில் குளிர்சாதன பெட்டியில் பாதுகாக்கப்படும் நிலையில் இதை அருந்துவதற்கும் சிறுதுவாரம் உள்ளது ,இப்படியொரு நிலை மைலோ பானத்தை நாம் தொற்றுள்ளதா அல்லது புழுக்கள் பிடித்துள்ளதா ?

இதை நாம் அருந்த முடியுமா? என ஆராய்ந்து மைலோ குளிர் பானத்தை அருந்த முன், மேல் முனையை வெட்டி பார்த்து பரிசோதித்து குடிக்கும் நிலைக்கு எமது இலங்கை வாழ் மக்கள் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

அண்மைக்காலமாக இலங்கை தயாரிப்பு பொருத்தவரை எதை பாதுகாப்பான உணவு பொருட்கள் என கருதுகின்றோமோ அவை தற்போது பொதுமக்களிடையே நம்பக தன்மையே கேள்விக்குறியாக்கின்றது.

இதற்கெல்லாம் காரணம் சுகதார அமைச்சில் தலைவிரித்தாடும் ஊழல் தனியார் உணவு நிறுவனங்களின் பணத்தில் கட்டுண்ட அரச அதிகாரிகள், எப்பொருட்களையும் பரிசோதிக்காமல் தரச்சான்றிதழ் கொடுப்பதும் இதனால்தான் கலப்படம் மலிந்து அநியாயம் அதிகரித்துவிட்டதே காரணமாகும் .