மைத்திரியைத் தோற்கடிப்பதற்காக மேடை மேடையாக ஏறி வேலை செய்வேன்-ஹிருணிக்கா!

வெள்ளி ஜூலை 12, 2019

சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தோற்கடிப்பதற்காக தான் மேடை மேடையாக ஏறி வேலை செய்யவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர சபதமெடுத்துள்ளார்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களை கவனமாக வாகனங்களில் பயணிக்குமாறும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இன்று இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வின்போதே கிருணிக்கா மேற்கண்டவாறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

மேலும் குறிப்பிட்ட ஹிருணிக்கா,தான் சுயாதீன தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளவிருந்தபோது நிகழ்சிக்கு முதல்நாள் தன்னை அங்கு வரவேண்டாமென்று குறித்த தொலைக்காட்சியிலிருந்து அழைப்பெடுத்துச் சொன்னதாக கூறியுள்ளார்.

இது ஜனாதிபதி மைத்திரியின் உத்தரவின்பேரிலேயே இடம்பெற்றது. என்னை தொலைக்காட்சிக்கு அழைக்கவேண்டாமென்று ஜனாதிபதிதான் அங்குள்ள அதிகாரிக்கு கூறியுள்ளார்.இதனால் எனது சிறப்புரிமையை மீறியுள்ளார்.மைத்திரியை வெல்லவைப்பதற்காக நான் மேடைமேடையாக ஏறியதுபோலவே அவரை தோற்கடிப்பதற்காக மேடை மேடையாக ஏறி வேலைசெய்யவிருக்கிறேன்.

சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உங்கள் வாகனங்களீல் செல்லும்போது கவனமாக இருங்கள்.

உங்களுக்கு எதுவேண்டுமானாலும் நடக்கலாம்.அரச இயந்திரம் உங்களுக்கு எதிராக எதையும் செய்யலாம்”என்று ஹிருணிக்கா மேலும் கூறியுள்ளார்.