மாகாண சபை தேர்தலிலும் தொலைபேசியில் போட்டி

வியாழன் ஓகஸ்ட் 13, 2020

எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியானது தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அதன் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ளவர்களும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்ள முடியும் என்று தெரிவித்துள்ள அவர், ஊழல்வாதிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என்றும் கூறியுள்ளார்.