மாமல்லபுரம் சிற்பங்களின் தொன்மையை சீன அதிபருக்கு விளக்கிய மோடி!

வெள்ளி அக்டோபர் 11, 2019

மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களின் தொன்மையை பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு விளக்கி கூறினார்.

பிரதம் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுரம் சென்றனர். வேட்டி சட்டையுடன் வந்திறங்கிய பிரதமர் மோடி சீன அதிபரை வரவேற்றார்.

அதன் பின்னர் தலைவர்கள் இருவரும் அர்ச்சுனன் தபசு பகுதிக்கு சென்றனர். அங்கிருந்த சிற்பக்கலைகளின்  தொன்மை மற்றும் சிறப்புகள் குறித்து ஜி ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி விளக்கி கூறினார்.  வெண்ணெய் உருண்டை பாறை முன் இருவரும் கைகளை கோர்த்து உயர்த்தி ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி இளநீர் அருந்தும் காட்சி

 

அங்குள்ள ஐந்து ரதம் பகுதியில் அமர்ந்து பேசியவாறு பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் இணைந்து இளநீர் பருகினர்.   

Related Tags :