மாணவ சமூகத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள பேரணிக்கு உலகத்தமிழ் மக்கள் ஆதரவு வழங்கவேண்டும்- திரு ஸ்டீவன் புஷ்பராஜா

வெள்ளி மார்ச் 15, 2019

கால அவகாச நீடிப்பு என்பது தமிழர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய நீதி மறுக்கப்படுவதாகவே அமைகின்றது. இவ் அநீதியை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். அந்தவகையில் தாயகத்தில் மாணவ சமூகத்தின் ஏற்பாட்டில்  நடைபெறவுள்ள மாபெரும் பேரணி வெற்றிகரமாக அமையவேண்டும் என அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை சார்பாக  திரு ஸ்டீவன் புஷ்பராஜா  அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.