மாணவர்களின் சுமையை குறைக்க- நீட் தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த திட்டம்!

திங்கள் சனவரி 04, 2021

நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு, புதிய பரிந்துரை ஒன்றை தேசிய தேர்வு முகமை, மத்திய சுகாதாரத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளது.

ஆண்டுதோறும் நாடு முழுவதும் நடைபெறும் நீட் தேர்வின் மூலம், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான இடங்கள் நிரப்பப்படுகின்றன. அதன்படி நீட் மருத்துவ நுழைவுத் தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் சுமை குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீட் தேர்வு ஆன்லைன் மூலம் நடத்துவதற்கும், சுகாதாரத்துறையிடம் தேசிய தேர்வு முகமை அனுமதி கோரியுள்ளது. இதற்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில், ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.