மார்பக புற்றுநோய்: ஆண்களும்.. அறிகுறிகளும்..

புதன் டிசம்பர் 08, 2021

சமீபகாலமாக மார்பக புற்றுநோய்க்கு ஆளாகும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. என்ன மாதிரியான அறிகுறிகள் மார்பக புற்றுநோய் பாதிப்புக்கு வித்திடும் என்பது குறித்து பார்ப்போம்.

மார்பக புற்றுநோய் பெண்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. சமீபகாலமாக மார்பக புற்றுநோய்க்கு ஆளாகும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் ஏதும் வெளிப்படாததும், போதிய விழிப்புணர்வு இல்லாததும் புற்றுநோய் பாதிப்பை எதிர்கொள்வதற்கு காரணமாக இருக்கிறது.

மார்பகத்தில் கட்டிகள் உருவாகுவது பொதுவான அறிகுறியாக அமைந்திருக்கிறது. மார்பக சருமத்திற்கு அடியில் திசுக்களின் அமைப்பில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக இந்த கட்டிகள் உருவாகின்றன. அது வலியற்றதாக இருப்பதால் ஆண்கள் அதனை கவனத்தில் கொள்வதில்லை. இதுபோன்ற வேறு என்ன மாதிரியான அறிகுறிகள் மார்பக புற்றுநோய் பாதிப்புக்கு வித்திடும் என்பது குறித்து பார்ப்போம்.

1. சிலருக்கு மார்பகத்தின் காம்பு பகுதி உள்நோக்கி சுருண்ட நிலையில் காணப்படுவது பொதுவானது. அடிப்படை திசு வளர்ச்சியின் காரணமாக இது நடக்கிறது. அதேவேளையில் சிவத்தல், வீங்குதல், சரும செல்கள் சேதமடைதல், கட்டிகள், தடிப்புகள் தோன்றுதல் போன்ற அறிகுறிகள் மார்பக பகுதியில் தென்பட்டால் அது மார்பக புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியமானது.

2. சில சமயங்களில் மார்பக காம்பில் ரத்த கட்டிகள் தென்படலாம். காம்பில் இருந்து ரத்தம் போன்று ஒருவகை திரவம் கசியவும் செய்யலாம். அதுவும் மார்பக புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

3. மார்பக காம்பு பகுதியை சுற்றி புண், சொறி போன்ற பாதிப்பு ஏற்படுவது பொதுவானது. அேதவேளையில் மார்பக காம்பை சுற்றியுள்ள சருமம் சுருங்குதல், வீக்கம் அடைதல், சிவத்தல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் கவனத்தில் கொள்ள வேண்டியது அவ சியம்.

4. கைகளின் அக்குள் பகுதியில் இருக்கும் நிணநீர் பகுதியில் வீக்கம் ஏற்படுவதும் மார்பக புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். உடலில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற் படும்போது அக்குள் பகுதியில் வீக்கம் ஏற்படுவது பொதுவானது. அதே நிலை தொடர்ந்து நீடித்தால் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியமானது.

5. சிலருக்கு அரிதாக மார்பக காம்பு பகுதியில் புண் ஏற்படக்கூடும். அது எளிதில் குண மடையாது. வலி, எரிச்சல் உணர்வு தொடர்ந்து கொண்டிருந்தால் அது மார்பக புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

ஆண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றுள் முதுமை முக்கிய காரணியாக அமைந்திருக்கிறது. பெரும்பாலும் வயதானவர் களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அதேவேளையில் எந்த வயதிலும் மார்பக புற்றுநோய் ஏற்படலாம். உடல் பருமனும் மார்பக புற்றுநோயுடன் தொடர்புடையது.

உயரத்திற்கு ஏற்ப உடல் எடையை பராமரிக்க வேண்டும். ஆரோக்கியமான உணவு பழக்கம், உடற்பயிற்சி மூலம் மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கலாம். மரபணுக்கள் மூலமும் மார்பக புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாக நேரிடலாம். குடும்பத்தில் தந்தை, தாத்தா, மாமா போன்ற நெருக்கமான உறவுகளில் யாருக்கேனும் மார்பக புற்றுநோய் இருந்தால் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். புகைப்பழக்கம், மது பழக்கம் போன்றவையும் மார்பக புற்றுநோய்க்கு முக்கிய காரணங்களாகும். மது பழக்கம் கொண்டவர்களுக்கு கல்லீரல் பாதிப்பு இருந்தால் அதுவும் மார்பக புற்றுநோய்க்கு வழிவகுத்துவிடக் கூடும். மார்பகத்தை சுற்றியுள்ள பகுதியில் கட்டிகள் அல்லது வேறு ஏதேனும் மாற்றங்கள் தென்பட்டால் பரிசோதனை செய்து கொள்வது அவசியமானது.