மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2022 - சுவிஸ்

சனி ஜூலை 16, 2022

தாயகவிடுதலையைநெஞ்சினில் சுமந்து இறுதிவரைகளமாடிதமது இன்னுயிர்களை உவந்தளித்தஎமதுமண்ணின் அழியாச்சுடர்;களானமாவீரர்கள் நினைவுசுமந்தவிளையாட்டுப் போட்டிகளானது 10.07.2022 ஞாயிறுஅன்றுபேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள வங்க்டோர்வ் மைதானத்தில்; சிறப்பாகநடைபெற்றது.

சுவிஸ் தமிழர்ஒருங்கிணைப்புக் குழுவின்விளையாட்டுத்துறையினால் நடாத்தப்பட்டஇப் போட்டிகளானது பொதுச்சுடரேற்றலுடன், சுவிஸ் மற்றும் தமிழீழத் தேசியக்கொடியும் ஏற்றிவைக்கப்பட்டதனைத் தொடர்ந்துஈகைச்சுடர்,அகவணக்கம்,மலர்வணக்கத்துடன் போட்டிகள் ஆரம்பமாகின.

தமிழ்த்தேசியத்திற்குவலுச்சேர்;க்கவும்இதாயகம் நோக்கியதேடலுடன் இளையோர்களை வழிப்படுத்தவும், மாவீரர்களின் தியாகநினைவுகள் ஊடாகதாயகஉணர்வோடு அவர்களைஒருமைப்படுத்தும்நோக்கிலும் ஒழுங்கமைக்கப்பட்ட மாவீரர் நினைவுசுமந்த இவ் விளையாட்டுக்களில் நூற்றுக்கணக்கான போட்டியாளர்களோடு தமிழினஉணர் ;வாளர்களும்இவிளையாட்டுஆர்வலர்களும்; பங்குபற்றியிருந்தமைகுறிப்பிடத்தக்கது. 

தமிழீழத் தேசியமாவீரர் நினைவுசுமந்துமுதற் தடவையாக நடாத்தப்பெற்ற இருபாலாருக்குமான சுவட்டுமைதான மெய்வல்லுனர் போட்டிகளிலும் நூற்றுக்கணக்கானபோட்டியாளர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர். பங்குபற்றியஅத்தனைபோட்டியாளர்களுக்கும் .அவர்களை ஊக்கப்படுத்தி வழிகாட்டிய பெற்றோர்களுக்கும், நெறிப்படுத்தியஆசிரியர்களுக்கும் இத்தருணத்தில் எமதுபாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். 

வளர்ந்தோர் உதைபந்தாட்டம், இளையோர் உதைபந்தாட்டம்,பெண்கள் உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம் ,துடுப்பாட்டம் போன்றபலபிரிவுகளில் அனைத்துவிதமான போட்டிகளும்; நடைபெற்றதுடன் 31வதுதடவையாக நடைபெற்றமாவீரர்கள் நினைவுசுமந்தவிளையாட்டுப் போட்டிகளில்வெற்றிபெற்றகழகங்களைச் சேர்ந்தவீரர்களுக்கான பதக்கங்களும், கேடயங்களும்வழங்கிமதிப்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்துசுவிஸ் மற்றும் தமிழீழத் தேசியக்கொடிகையேற்கப்பட்டுதாரகமந்திரத்துடன் போட்டிகள்; சிறப்பாகநிறைவடைந்தன. 

இவ் விளையாட்டுப் போட்டிகள்சிறப்பாகநடைபெறஅனைத்துவகைகளிலும் முழு ஒத்துழைப்புநல்கியஅனைத்துக் கழகங்கள்,கழகநிர்வாகிகள்,பயிற்சியாளர்கள் மற்றும் கழகவீரர்கள் ,ஆர்வலர்கள், ஆதரவாளர்கள் செயற்பாட்டாளர்கள், இனஉணர்வாளர்கள் உள்ளிட்டஅனைத்துஎமதுஉறவுகளுக்கும் பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

விளையாட்டுத்துறை,
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.
12.07.2022