மாவீரர் வார நினைவேந்தல்!

திங்கள் நவம்பர் 25, 2019

செங்களமடி மண்ணை முத்தமிட்ட மாவீரர்களுக்கான நினைவேந்தல் இன்று பிரித்தானியாவில் வேல்ஸ் பகுதியில் தமிழ் கலை கல்விக்கூடத்தினால் நடாத்தப்பட்டது .

நிகழ்விற்க்கான ஆரம்பமாக வேல்ஸ் கொடியினை சசிரூபன் பரராஜசிங்கம் ஏற்றி வைத்தார்கள் .
தமிழீழ தேசிய கொடியினை உருத்திர பாரதி சோக ஏற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.
அகவணக்கத்தை தொடர்ந்து பொதுச்சுடரினை திரு துரை ராஜா தனேஸ்வரன் ஏற்றி வைத்தார்.
தொடந்து மண்ணின் மைந்தர்களுக்கான மலர் வணக்கம் , சுடர் வணக்கம் இடம்பெற்றது .

நினைவேந்தல் நிகழ்வின் நிகழ்வின் சிறப்புரையினை மன்னார் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் திரு.சுரேஷ் நிகள்த்தினார் . இளையோர் சிறப்புரையினை கீர்த்தனா உதயகுமார் , தொடர்ந்து வே .ச.தனுஷன் ஆகியோர்களின் உரைகளை தொடர்ந்து அனானியாவின் வட்டு வாகல் நாடகம் ,சுஜித் மற்றும் உயற்சி ஆகியோரின் கேட்டியே கிளி நாடகம் ,தமிழ் கலை பண்பாட்டு கல்விக்கூடம் வேல்ஸ் – இரு துயரங்கள் என்ற நாடகமும் , மாவீர கானங்கள் , எழுச்சி கவிதைகள் என பல்வேரு நிகழ்வுகளோடு மாவீர் நினைவுகள் நினைவு கூறப்பட்டது .

மாவீரர்களின் கனவுகளை நனவாக்குவோம் என்ற உறுதிமொழியோடு தமிழீழ தேசிய கோடி கையேந்தப்பட்டு நிகழ்வானது நிறைவு பெற்றது.