மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி யேர்மனி

திங்கள் ஜூலை 18, 2022

தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் வருடம்தோறும் நடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டி இந்தவருடம் மிகச்சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றது.

மாவீரர் வெற்றிக் கிண்ணப் போட்டியானது வருடம் தோறும் யேர்மனியில் உள்ள தமிழாலயங்களை மாநில ரீதியாக ஒருங்கிணைத்து நடாத்தப்படுகின்றது. அந்த வகையில் கடந்த சனிக்கிழமை 16.7.2022 அன்று யேர்மனி சார்லான் மாநிலத்தில் உள்ள தமிழாலயங்களை இணைத்து நடாத்தப்பட்டது. சார்லான்ட் மாநிலத்தில் உள்ள பத்திற்கும் மேற்பட்ட தழிழாலங்கள் சிறப்பாகப் பங்காற்றி மாவீரர்களின் தியாகங்களை மனதில் நிலைநாட்டிக் கொண்டனர்.

பொதுச்சுடர் ஏற்றப்பட்டு யேர்மனியத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டபின் தமிழீழத் தேசியக் கொடி ஏற்றிவைக்கப்பட்டு பின்பு தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவமாகிய தமிழ்க் கல்விக்கழகத்தின் கொடியும் ஏற்றிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வீர வீராங்கனைகளால் ஒலம்பிக் தீபம் மைதானத்தைச் சுற்றி எடுத்துவரப்பட்டு ஏற்றிவைக்கப்பட்டது.

பின்பு உறுதிமொழி எடுக்கப்பட்டு தமிழாலய மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மெய்வல்லுனர் விளையாட்டுக்கள் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றது.

வெற்றிபெற்ற வீர வீராங்கனைகளுக்கு உடனுக்குடன் பதக்கங்கள் அணுவித்து மதிப்பளிக்கப்பட்டது. இறுதியாக முதலாவது இடத்தினைச் சார்புறுக்கன் தமிழாலயமும், இணர்டாவது இடத்தினைச் சுல்ஸ்பாக் தமிழாலயமும், மூன்றாவது இடத்தினை லன்டோவ் தமிழாலயமும் பெற்றுக்கெண்டன. இத் தமிழாலயங்களுக்கு வெற்றிக் கேடயங்கள் வழங்கப்பட்டு புள்ளிகளுக் கொடுக்கப்பட்டது.

பின்பு தேசியக் கொடிகள் இறக்கிவைக்கப்பட்டு மாவீரர்களின் தியாகச் சிந்தனையுடன் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற எழுச்சிப்பாடலுடன் மாவீரர்  வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டி நிறைவடைந்தது.