மாவட்ட செயலகத்தில் தனிச்சிங்கள மயம்!

செவ்வாய் மார்ச் 19, 2019

வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள காணி மாவட்ட பதிவகத்தில் கட்டண விபரங்கள் தனி சிங்கள மொழியில்  அமைக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக அமைச்சர் றிசாட் பதியூதின் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள காணி மாவட்ட பதிவகத்தில் காணிகளை விரைவாக பதிவு செய்யும் ஒருநாள் சேவையினை நடைமுறைப்படுத்தும் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது. 

இந் நிகழ்வில் கைத்தொழில் வர்த்தகம் நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள் குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் றிசாட் பதியூதின் மற்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

காணி மாவட்ட பதிவகத்தில் காணிகளை விரைவாக பதிவு செய்யும் ஒருநாள் சேவைக்குரிய கட்டண விபரங்கள் தனி சிங்கள மொழியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை தமிழ் மக்களிடையே பெரும் மனவருத்தினை உண்டுபடுத்தியிருந்தது.

இவ்விடயம் அமைச்சர் றிசாட் பதியூதினின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து இரு மொழி பேசும் மக்களும் இணைந்து வாழும் பிரதேசமாக வவுனியா காணப்படுகின்றது. எனவே இவ் கட்டண விபர பட்டியலை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில்  உடனடியாக  மாற்றுமாறு திணைக்கள அதிகாரிக்கு உத்தரவு பிறப்பித்தார்.