மே 02-2009 அன்று நடந்த சிறீலங்கா விமானபடையின் மிலேச்சத்தனமான தாக்குதல்கள்!!

திங்கள் மே 02, 2022

மே 02 2009 –ன் அன்று  இறுதியாக செயற்பட்டு வந்த ஒரேயொரு தற்காலிக மருத்துவமனை மீதும்  இரண்டு தடவை சிங்கள பேரினவாத அரசால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த தாக்குதல்களில்  ஏற்கனவே காயமடைந்திருந்த 64 பேர் கொல்லப்பட்டதுடன்  காயமடைந்தவர்களுடன் கூட நின்ற உறவினர்களையும் சேர்தது 87 பேர் வரையானோர் காயமடைந்தனர்.

111

9.00 மணியளவில் இரண்டு அட்லறி செல்கள் வைத்தியாசாலைக்குள் விழுந்து வெடித்ததில் 23 பேர் கொல்லப்பட்டதுடன் 43 பேர் காயமடைந்தனர்  மீண்டும் 10.30 மணியளவில் எண்ணிலடங்கா பல  செல்கள் வைத்தியாசாலை மீது விழுந்து வெடித்ததில் 41 பேர் கொல்லப்பட்டதுடன் 53 பேர் காயமடைந்தனர்.

3 நாட்களிற்கு முன்பாகவே வைத்தியசாலை அமைவிடம் தொடர்பாக சரியான தகவலை சிறீலங்கா அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டிருந்ததுடன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சிறீலங்கா விமானப்படையின் ஆளில்லா வேவு விமானங்களும்  வைத்தியசாலையை தமது கண்காணிப்பில் வைத்திருந்து  இவ்விரண்டு தாக்குதல்களும் நடந்திருந்தது.

தமிழ் மக்களைதமதுபகுதிக்குள் வரச் செய்வதற்காகவே அந்த மிலேச்சத்தனமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் இது அதற்காக  செய்யப்பட்டுள்ளதாக இனப்படுகொலையாளி மகிந்த  ராஜபக்சவின் துண்டுப் பிரசுரங்களை மேற்கோள் காட்டி ஒரு மீட்புப் பணியாளர் மக்களிற்கு தகவல் வழங்கியும் இருக்கிறார்.

111

வைத்தியாசாலை கட்டிடத்திலும் சூழ உள்ள இடங்களிலும் 400 வரையானவர்கள் நின்ற போது முதலாவது தாக்குதல் நடந்திருந்ததுடன் முதல் தாக்குதலில் காயமடைந்தவர்களை, இறந்தவர்களை  அப்புறப்படுத்திக்கொண்டிருந்த போதே இரண்டாவது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இத்தாக்குதலில் ஒரு பெண் வைத்தியர் கொல்லப்பட்டதுடன் மேலும் 3 தன்னார்வலர்கள் காயமடைந்திருந்தனர் அவர்களில் ஒருவர் உயிரிழை அறுந்து உணர்வற்ற தன்மைக்கும் சென்றிருந்தா்.

இதற்கு முதன் முறை மருத்துவமனை தாக்கப்பட்ட பின்னர் சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சிற்கு வைத்தியசாலை அமைவிட தகவல்கள் வழங்கப்பட்டதை உறுதிப்படுத்திய செஞ்சிலுவை சங்க பணியாளர் சிறீலங்கா அரசாங்கள் மக்களை தங்கள் பக்கத்திற்கு வரச் செய்வதற்காகவே மிலேச்சத்தனமான தாக்குதல்களை மேற்கொள்வதாக்வும் குறிப்பிட்டார்.