மே 18 ,,,,.

சனி மே 18, 2019

முள்ளிவாய்க்கால் 
முற்றத்தில் உங்களை
எதிரிகள் 
கொத்து கொத்தாக 
கொன்று புதைக்க பட்ட 
நாள் மடடுமல்ல 
மானுடம் தலைகுனிந்த
நாள்,
உலகநாடுகள் 
ஒன்றாகி 
உலகிற்கு போர் 
மரபுகளை வகுத்து 
நடைமுறை 
செய்தவர்களே 
அதன் விதிகளை 
எல்லாம் அந்த 
மண்ணில் புதைத்த 
நாளும்கூட
இன்றோடு
உங்களைஇழந்து 
ஒரு தசாப்தத்தை 
நாம் கடந்து 
செல்கிறோம் 
உங்கள் ஆன்மாக்களின் 
கேள்விகளுக்கு 
பதில் கூறாது உலகும்
மௌனம் காக்கிறது 
எம் மறவர்கள் கையில் 
தவழ்ந்த 
கருவிகளைப்போன்று 
அவர்கள் மௌனம்
கலையும்நாள்
எப்போதோ!
எமக்கான நீதி 
எப்போது,,,,,,!
அன்றய நாள்
உலகின் பல 
தேசங்களும் எம்
தேசத்தை அழித்த
போர்குற்றவாளிகளே 

றொப்