மோடியை சந்திக்கவுள்ள கோத்தா!

வெள்ளி நவம்பர் 29, 2019

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள சிறிலங்கா  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இன்றைய தினம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளார்.

அதன்படி இந்தக் கலந்துரையாடலானது புதுடில்லியல் உள்ள ஹைதராபாத் மாளிகையில் இடம்பெறவுள்ளது.

இந்தக் கலந்துரையாடலின்போது இரு தலைவர்களுக்குமிடையிலான ஒத்தழைப்பு மற்றும் இந்தியா மற்று ம்சிறிலங்காவிற்கு  இடையிலான பரஸ்பர நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்படவுள்ளது.

முன்னதாக, இந்திய விஜயம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கோத்தாபய ராஜபக்ஷ கூறுகையில், 

இலங்கை - இந்தியா இரு நாடுகள் இடையே உள்ள இருதரப்பு உறவை வலுப்படுத்த  சிறிலங்கா பிரதமர் மோடியுடனான சந்திப்பை எதிர் நோக்கியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்தக் கலந்துரையாடலின் பின்னர்  சிறிலங்கா ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பினை ஏற்று நேற்றைய தினம் இந்தியாவுக்கு சென்றிருந்த கோத்தாபய ராஜபக்ஷவை உள்ளிட்ட குழுவினருக்கு புதுடில்லி விமான நிலையத்தில் வைத்து இந்திய மத்திய அமைச்சர் வி.கே.சிங் வரவேற்பு அளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.