மேஜர் செல்வராசா மாஸ்ரரின் தாயார் திருச்சியில் காலமானார்!

வெள்ளி மார்ச் 15, 2019

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பகால உறுப்பினரும் சிறந்த போர்ப் பயிற்சி ஆசிரியருமாகத் திகழ்ந்த மேஜர் செல்வராசா மாஸ்ரர்/அன்பு அவர்களின் தாயார் சின்னத்துரை பாக்கியம் அவர்கள் திருச்சியில் காலமானார்.

யாழ்ப்பாணம், மயிலிட்டியை சேர்ந்த அமரர்.சின்னத்துரை பாய்கியம் அவர்கள் கடந்த 13/03/2019 அன்று சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் திருச்சி ஐய்யப்ப நகரில் உள்ள தற்காலிக வதிவிடத்தில் வியாழன் அன்று நடைபெற்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.