மெல்போர்ன் நகரில் மீண்டும் 6 வாரத்திற்கு ஊரடங்கு

செவ்வாய் ஜூலை 07, 2020

மெல்போர்ன் நகரில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், மீண்டும் 6 வாரத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் மாதத்தில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதன்பின் கொரோனா தாக்கம் குறைய ஆரம்பித்தது. ஆஸ்திரேலியாவில் 9 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 106 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று குறைய ஆரம்பித்ததால் தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் மெல்போர்ன் நகரில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் விக்டோரியா மாநில முதல்வர் 6 வாரத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். மெல்போர்னில் சுமார் 50 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.