மெரினா வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் கூட பொதுமக்களுக்கு தடை!

செவ்வாய் சனவரி 12, 2021

தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் திருநாளை தமிழர்கள், வருடந்தோறும் தை மாதத்தில் கொண்டாடுவார்கள்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது, 

அதில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றத் தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி"தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ்" தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்துவருகிறது.

தமிழக அரசு இந்த நோய் தொற்றிலிருந்து மக்களைக் காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்துவருகிறது.

காணும் பொங்கல் அன்று கடற்கரையில் அளவுக்கு அதிகமான பொதுமக்கள் கூட்டம் கூடுவதால் கொரோனா தொற்று ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் காணும் பொங்கல் அன்று மட்டும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பொங்கல் விடுமுறை நாட்களில் வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா, மாமல்லபுரம் சுற்றுலாப் பகுதிகள், சென்னையிலுள்ள கிண்டி தேசிய பூங்கா, மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் அளவுக்கு அதிகமாக பொதுமக்கள் கூட்டம் கூடுவதால் கொரோனா நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளதைக் கருத்திக் கொண்டு முன்னெச்சரிக்கையாக இதனைத் தடுக்கும் வகையில் மேற்கண்ட அனைத்து இடங்களிலும்15, 16, 17 ஆகிய விடுமுறை நாட்களில் அனுமதி இல்லை’ என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.