மஹிந்த ஆட்சியை விரும்பும் இந்தியா-ஜீ.எல்.பீரிஸ்

செவ்வாய் பெப்ரவரி 12, 2019

மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான புதிய ஆட்சியொன்று உருவாக வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே இந்தியா இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.பெங்களூரில் மாநாடொன்றில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துக் கொண்டிருந்தார். இதன்போது இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, இந்திய ஊடக பிரதானிகள், உயர் மட்ட வர்த்தக பிரதிநிதிகள், பேராசிரியர்கள் எனப் பெரும்பாலனோர் கலந்துக் கொண்டிருந்தனர்.

இவர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போது இலங்கையில் இவ்வாண்டுக்குள் மாற்றமொன்று நிகழும் என அவர்கள் அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.

அதுமாத்திரமின்றி நாட்டில் மஹிந்த தலைமையில் புதிய அரசாங்கமொன்று தோற்றம் பெறும் என்றும் அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.