மீண்டும் ஆஸ்திரேலியா செல்ல முயலும் இலங்கையர்கள் !

திங்கள் ஓகஸ்ட் 19, 2019

இலங்கையின் சிலாபம் என்ற பகுதியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக சென்ற 13 இலங்கையர்களை ஆஸ்திரேலிய அதிகாரிகள் நாடுகடத்தியுள்ளனர். 

மீன்பிடி படகு மூலம் ஆஸ்திரேலிய எல்லை அருகே சென்ற 13 இலங்கையர்களும்,  சிறப்பு விமானம் மூலம் நாடுகடத்தப்பட்டு இலங்கை குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

அதே போல், ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்வதற்காக சிலாபம் பகுதியில் தங்கியிருந்ததாக 12 பேர் இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வாழைச்சேனை, தொடுவா, கல்குடா, வெளிக்கண்ட பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற இருவேறு சம்பவங்கள் அடுத்தடுத்த நடந்துள்ள நிலையில், இவ்வாறான படகு பயணங்கள் வரும் காலத்தில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.